சிபிஆர் வீட்டில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடிய பிரதமர் மோடி

சிபிஆர் வீட்டில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடிய பிரதமர் மோடி
Updated on
1 min read

புதுடெல்லி: குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் வீட்​டுக்கு நேரில் சென்று பிரதமர் மோடி தமிழ்ப் புத்​தாண்டு வாழ்த்து தெரி​வித்​தார். அப்​போது அவருக்கு நினை​வுப் பரி​சாக முரு​கன் படத்தை சிபிஆர் வழங்​கி​னார்.

இது குறித்து குடியரசு துணைத் தலை​வர் சிபிஆர், ‘எக்​ஸ்’ தளத்​தில் வெளி​யிட்​டுள்ள பதி​வில், “பாரதப் பிரதமர் நரேந்​திர மோடி அவர்களு​டன் இன்று குடியரசு துணைத் தலை​வர் மாளி​கை​யில், தமிழ்ப் புத்​தாண்டு வாழ்த்​துகளைப் பரி​மாறிக் கொண்​ட​தில் பெரும் மகிழ்ச்சி கொள்​கிறேன். அனை​வருக்​கும் வளமும், நலமும், அமை​தி​யும், மகிழ்ச்​சி​யும் நிரம்​பிய சிறந்த ஆண்​டாக இந்​தப் புத்​தாண்டு அமைய பிரார்த்​தனை செய்​தோம்.

தமிழ்ப் புத்​தாண்டு நமது முன்​னோர்​களின் ஞானத்தை வெளிப்படுத்​து​வதுடன் பாரம்​பரி​யம், ஆன்​மிகம் மற்​றும் அறம் சார்ந்த வாழ்​வைப் போற்​றும் ஒப்​பற்ற விழா​வாக கொண்டாடப்படு​வது பற்றி கலந்​துரை​யாடினோம். நாடு முழுவதும் ஒரே நேரத்​தில் வெவ்​வேறு பெயர்​களில் கொண்டாடப்படும் இந்த புத்​தாண்டு தினத்​தில், அனை​வருக்​கும் எனது இதயம் கனிந்த புத்​தாண்டு வாழ்த்​துகள்” என்று குறிப்பிட்டுள்​ளார்.

இந்த சந்​திப்​பின் காட்​சிப்​ப​திவை​யும் சிபிஆர் தனது ‘எக்​ஸ்’ தளத்தில் பதிவேற்​றம் செய்​துள்​ளார். அதில் அவரது பூஜை அறையில் இந்து கடவுள்​களின் படங்​களுக்கு பிரதமர் மோடி தீபாராதனை செய்​யும் காட்சி இடம் பெற்​றுள்​ளது. முன்​ன​தாக வாசல் வரை வந்து பிரதமர் மோடியை மாளி​கை​யினுள் சிபிஆர் அழைத்து வரும் காட்சி உள்​ளது. அதே​போல், பிரதமரை வாசல் வரை சென்று வழியனுப்​பும் காட்​சி​யும் இடம்​பெற்​றுள்​ளது. தனக்கு வாழ்த்து தெரிவிக்க வந்த பிரதமருக்கு முரு​கன் படத்தை நினை​வுப்​ பரி​சாக சிபிஆர் அளித்​தார்.

இந்த சந்​திப்பை பிரதமர் மோடி​யும் தனது முகநூல் பக்​கத்​தில் படங்​களு​டன் பதிவேற்​றம் செய்​துள்​ளார். அதில் பிரதமர் மோடி, ‘சிறப்பு வாய்ந்த புத்​தாண்டு தினத்​தில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் அவர்​களை சந்​தித்து வாழ்த்து தெரி​வித்​தேன். நல்ல ஆரோக்​கிய​மும், மகிழ்ச்​சி​யும் நிறைந்த அற்புத​மான ஆண்​டாக அமைந்​திட பிரார்த்​திக்​கிறேன்” எனப் பதிவிட்​டுள்​ளார்.

பிறகு பைசாகிப் பண்​டிகையை முன்​னிட்டு டெல்​லி​யின் ரகாப் கஞ்ச் சாஹிப் குருத்​வா​ரா​வுக்கு சிபிஆர் சென்​றார். அங்கு அனைவரின் அமை​தி, வளம் மற்​றும் நல்​வாழ்​வுக்​காக பிரார்த்தனை செய்​தார். டெல்லி துணைநிலை ஆளுநர் தரண்​ஜித் சிங் சந்​து, அமைச்​சர் மஞ்​சிந்​தர்​ சிங்​ சிர்​சா ஆகியோர்​ உடனிருந்தனர்​.

சிபிஆர் வீட்டில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடிய பிரதமர் மோடி
ஈரானின் ‘ஹார்முஸ் ஜலசந்தி மூடல்’ எனும் அமெரிக்க வியூகமும் தாக்கமும் - ஒரு தெளிவுப் பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in