

புதுடெல்லி: டெல்லியில் வந்த ரஷ்ய அதிபர் புதினை நேரில் வரவேற்று தனது காரில் அழைத்து சென்றார்.
இது தொடர்பாக ரஷ்ய நிருபர் பாவெல் அலெக்ஸாண்ட்ரோவிச் ஜரூபின் பகிர்ந்து கொண்ட ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வெள்ளை டொயொட்டோ ஃபர்ச்சுனர் காரில் புதினும் பிரதமர் நரேந்திர மோடி ஒன்றாக அமர்ந்திருப்பதையும் இருவர் இடையிலான அரிய தருணங்களையும் இது காட்டுகிறது.
ரஷ்ய அதிபர் மாளிகையில் உயர்மட்ட விவகாரங்கள் பற்றிய செய்திகளுக்கு பெயர் பெற்ற ஜருபின், இரு தலைவர்களின் இந்த வெளிப்படையான தருணங்களை படம் பிடித்தார். வழக்கமாக, ரேஞ்ச் ரோவர் காரில் பயணம் செய்யும் மோடி, இம்முறை அதை தவிர்த்து ஃபார்ச்சுனர் காரில் புதினுடன் பயணம் செய்தார். இதுபோல் புதினும் தனது வழக்கமான ஆரஸ் செனட் காரை தவிர்த்தார்.
புதின் தனது வெளிநாட்டுப் பயணங்களில் பயன்படுத்தும் ஆரஸ் செனட் கார் ஆடம்பர வசதிகள் மற்றும் அதிக பாதுகாப்பு அம்சங்களை கொண்டது. மிக மோசமான தாக்குதல்களை சமாளிக்க கூடியது. புதின் எங்கு சென்றாலும் அவரது தனிப்பட்ட பாதுகாப்புக்காக வடிவமைக்கப்பட்ட இந்த காரும் செல்லும்.