மேற்கு வங்கத்தில் 15 ஆண்டுகளாக ஊழல் ஆட்சி: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் 15 ஆண்டுகளாக ஊழல் ஆட்சி: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
Updated on
1 min read

புதுடெல்லி: வங்காள புத்தாண்டு ‘பொய்லா பைசாக்’-ஐ முன்னிட்டு மேற்கு வங்க மக்களுக்கு பிரதமர் எழுதிய வாழ்த்து கடிதத்தில் கூறியிருப்பதாவது: வங்காள புத்தாண்டை முன்னிட்டு மேற்கு வங்க மக்களுக்கு வாழ்த்துகள்.

கடந்த 15 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் குழப்பமான ஊழல் ஆட்சி நடைபெறுகிறது. மக்கள் தங்களின் அடிப்படை உரிமை, கவுரவம் மற்றும் வளமான கலாச்சார பாரம்பரியத்தை இழந்துள்ளனர். மேற்கு வங்கத்தில் தற்போது நிலவும் சூழல் பெண்களின் பாதுகாப்பு, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு,ஏழைகளின் உரிமைகள் ஆகியவற்றை சீர்குலைத்துள்ளது.

ஒரு காலத்தில் மேற்கு வங்கம் நாட்டுக்கு வழி காட்டியது. எனவே வளர்ச்சியடைந்த மேற்கு வங்கத்தை உருவாக்க நாம் உறுதி எடுக்க வேண்டும். இங்கு ஏழைகள் பட்டினியாக இருக்கக் கூடாது. இளைஞர்கள் வேலை தேடி வேறு மாநிலங்களுக்கு செல்லக் கூடாது.

மேற்குவங்கத்தின் எதிர்காலம் வரும் சட்டப்பேரவை தேர்தலில் உள்ளது. பாஜக அரசு மேற்கு வங்கத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும். அதனால் மக்கள் இந்த தேர்தலில் சரியான முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேற்கு வங்கத்தில் 15 ஆண்டுகளாக ஊழல் ஆட்சி: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
தமிழகத்தில் ஜென்ஸீ வாக்குகள் யாருக்கு? - ஒரு விரைவுப் பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in