“அச்சமற்ற புதிய சகாப்தம் தொடக்கம்” - பிரதமர் மோடி உணர்ச்சிப்பூர்வ உரை

மேற்கு வங்கத்தில் மலர்ந்தது தாமரை
மேற்குவங்கம், அசாம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களின் வெற்றியைக் கொண்டாடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லி பாஜக தலைமையகத்துக்கு வருகை தந்தார்.  அப்போது அக்கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நவீன்  உடனிருந்தார். படம்: பிடிஐ

மேற்குவங்கம், அசாம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களின் வெற்றியைக் கொண்டாடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லி பாஜக தலைமையகத்துக்கு வருகை தந்தார். அப்போது அக்கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நவீன் உடனிருந்தார். படம்: பிடிஐ

Updated on
2 min read

புதுடெல்லி: மேற்கு வங்க சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பார​திய ஜனதா கட்சி 200-க்​கும் மேற்​பட்ட இடங்​களைக் கைப்​பற்றி வரலாற்​றுச் சிறப்​புமிக்க வெற்​றியைப் பதிவு செய்​துள்​ளது. இது மேற்கு வங்க மாநிலத்​தின் வரலாற்​றில் அச்​சமற்ற ஒரு புதிய சகாப்​தத்​தின் தொடக்​கம் என்று பிரதமர் நரேந்​திர மோடி உணர்ச்​சிப்​பூர்​வ​மாகக் கூறி​னார்.

மேற்குவங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வெற்​றியை கொண்​டாடு​வதற்​காக பிரதமர் மோடி நேற்று டெல்​லி​யில் உள்ள பாஜக தலைமை அலு​வல​கத்​துக்கு வருகை தந்​தார்.

அப்​போது அவர் தொண்​டர்​களிடம் உணர்ச்​சிப்​பூர்​வ​மாக உரை​யாற்​றிய​தாவது: மேற்கு வங்க தேர்​தல் வரலாற்று வெற்​றி​யின் மூலம், கங்​கோத்​திரி முதல் கங்கா சாகர் வரை எங்​கும் தாமரை மலர்ந்​துள்​ளது. 15 ஆண்டு கால மம்தா பானர்​ஜி​யின் திரிண​மூல் காங்​கிரஸ் ஆட்​சியை வீழ்த்​தி, முதன்​முறை​யாக மேற்கு வங்​கத்​தில் பாஜக ஆட்​சிப் பொறுப்பை ஏற்​பது இந்​திய அரசி​யலில் ஒரு முக்​கிய திருப்​பு​முனை​யாக இருக்​கிறது.

இந்த வெற்​றி​யின் மூலம் இந்​திய ஜனநாயக​மும், நமது அரசி​யலமைப்​பும் மீண்​டும் ஒரு​முறை வென்​றுள்​ளது. இதற்​கு, கட்​சித் தலை​வர் நிதின் நவீன் வழி​காட்​டு​தலும், தொண்​டர்​களின் அயராத உழைப்​புமே காரணம். நிதின் நவீன் தலை​வ​ராகப் பொறுப்​பேற்ற பிறகு சந்​தித்த முதல் தேர்​தலிலேயே இந்த பிரம்​மாண்ட வெற்றி பாஜக​வுக்கு கிடைத்​துள்​ளது.

கடந்த 2013-ம் ஆண்டு காசி​யில் நான் வேட்பு மனு தாக்​கல் செய்த போது தாய் கங்கை என்னை அழைத்​தாள். இன்று கங்கை மட்​டுமின்றி பிரம்​மபுத்​திரா மற்​றும் அன்னை காமாக்​கி​யா​வின் ஆசி​யும் பாஜக​வுக்​குக் கிடைத்​துள்​ளது. இதன் மூலம் அசாமில் தொடர்ந்து 3-வது முறை​யாக பாஜக கூட்​டணி ஹாட்​ரிக் வெற்றி பெற்று சாதனை படைத்​துள்​ளது.

மேற்கு வங்​கத்​தில் நிலவி வரும் வன்​முறை அரசி​யலுக்கு முற்​றுப்​புள்ளி வைக்க வேண்​டும். இனி வரும் காலங்​களில் பழி வாங்​கும் அரசி​யலுக்​குப் பதிலாகப் பண்​பட்ட மாற்​றத்​துக்​கான அரசி​யலே இங்கு முன்​னிறுத்​தப்பட வேண்​டும். மேற்கு வங்​கம் மட்​டுமின்​றி, மகா​ராஷ்டி​ரா, குஜ​ராத், நாகாலாந்து மற்​றும் திரிபுரா ஆகிய மாநிலங்​களில் நடை​பெற்ற இடைத்​தேர்​தல் முடிவு​களும் பாஜக​வுக்கு மிகுந்த ஊக்​கமளிப்​ப​தாக உள்​ளன. குறிப்​பாக, பாராமதி தொகு​தி​யில் மகா​ராஷ்டிர துணை முதல்​வர் சுனேத்ரா பவார் பெற்ற வெற்றி பாராட்​டுக்​குரியது.

இரண்டு கட்​டங்​களாக நடை​பெற்ற மேற்கு வங்க தேர்​தலில், பல்​வேறு சவால்​களைக் கடந்து பாஜக பெரும்​பான்​மைக்​குத் தேவை​யான 148 இடங்​களைத் தாண்டி 200-க்​கும் அதி​க​மான தொகு​தி​களைக் கைப்​பற்றி வங்க மண்​ணில் புதிய அரசி​யல் வரலாற்றை எழு​தி​யுள்​ளது.

ஜனநாயகத்துக்கு வெற்றி: நமது அரசி​யலமைப்பு நிறு​வனங்​களும், ஜனநாயக நடை​முறை​களும் இன்று வெற்றி பெற்​றுள்​ளன. மேற்கு வங்​கத்​தில் 93 சதவீத வாக்​குப் பதிவு என்​பது வரலாற்​றுச் சிறப்​புமிக்​கது. அசாம், தமிழகம், புதுச்​சேரி மற்​றும் கேரளா​விலும் புதிய வாக்​குப் பதிவு சாதனை​கள் படைக்​கப்​பட்​டுள்​ளன.

இந்​திய ஜனநாயகத்​தின் மாண்​பைக் காத்த தேர்​தல் ஆணை​யம், அதன் ஊழியர்​கள் மற்​றும் பாது​காப்​புப் பணி​யாளர்​களுக்கு எனது மனமார்ந்த நன்​றிகளைத் தெரி​வித்​துக் கொள்​கிறேன். உங்​களது பங்​களிப்பை வரலாறு என்​றும் நினை​வில் கொள்​ளும். இவ்​வாறு பிரதமர் மோடி உரை​யாற்​றி​னார்.

அமித் ஷா புகழாரம்: மேற்கு வங்​கத்​தில் 2 வாரங்​களுக்கு மேலாக முகாமிட்டு தேர்​தல் வியூ​கங்​களை வகுத்த மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா ‘‘இந்த வெற்றி வரலாற்று சாதனை’’ என்று வர்​ணித்​துள்​ளார். மேலும், இந்த வெற்றி ஊடுரு​வல்​காரர்​களுக்​கு ஒரு பாட​மாக அமைந்​துள்​ளது என்​றும்​ தெரி​வித்​துள்​ளார்​.

<div class="paragraphs"><p>மேற்குவங்கம், அசாம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களின் வெற்றியைக் கொண்டாடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லி பாஜக தலைமையகத்துக்கு வருகை தந்தார்.  அப்போது அக்கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நவீன்  உடனிருந்தார். படம்: பிடிஐ</p></div>
முதல்வர் ஆகிறார் விஜய்... தமிழகத்தில் அமையும் ‘மைனாரிட்டி’ அரசும், மக்கள் தீர்ப்பும் சொல்வது என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in