ஸ்ரீகிருஷ்ணஜென்மபூமி கோயில் காணிக்கையில் தங்கம், வெள்ளியின் தூய்மையை சோதிக்க திட்டம்

ஸ்ரீகிருஷ்ணஜென்மபூமி கோயில் காணிக்கையில் தங்கம், வெள்ளியின் தூய்மையை சோதிக்க திட்டம்
Updated on: 
1 min read

லக்னோ: உத்தர பிரதேசம் மதுராவிலுள்ள ஸ்ரீ கிருஷ்ணஜென்ம பூமியின் காணிக்கையில் ஒரு புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி, தங்கம் மற்றும் வெள்ளியின் தூய்மை அதிநவீன இயந்திரத்தைப் பயன்படுத்தி பரிசோதிக்கப்பட உள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணஜென்மபூமியின், காணிக்கைகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க புதிய நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் தூய்மையை சரிபார்க்க அதிநவீன இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இனி, பக்தர்கள் வழங்கும் ஒவ்வொரு நன்கொடைக்கும் ரசீது வழங்குவதற்கு முன்பாக, அந்தப் பொருட்கள் பரிசோதிக்கப்படும்.

அயோத்தி ராமர் கோயிலில் நன்கொடை பெறப்பட்ட பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதுடன், கோயில் நன்கொடை முறைகள் குறித்த கேள்விகளையும் எழுப்பியது. இதைக் கருத்தில் கொண்டு, கிருஷ்ணஜென்ம பூமி கோயில் நிர்வாகம் எடுத்துள்ள இந்த நடவடிக்கை, பக்தர்களின் உணர்வுகளை மதிப்பதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

இதுகுறித்து ஸ்ரீ கிருஷ்ணஜென்மபூமி சேவா சன்ஸ்தானின் செயலாளர் கபில் சர்மா கூறும்போது, "இனி கோயிலுக்கு நன்கொடை வழங்கப்படும் தங்கம், வெள்ளி மற்றும் பிற உலோகங்கள் பரிசோதிக்கப்படும்.

இதற்காக, ரசீது வழங்கப்படுவதற்கு முன்பாக அதிநவீன இயந்திரத்தின் மூலம் அதன் தரம் பற்றி முறையாகச் சரிபார்க்கப்படும்.

இதுகுறித்த முழுமையான விவரங்கள், நன்கொடை ரசீதுடன் சேர்த்து பக்தர்களுக்கு வழங்கப்படும். இந்த நடைமுறையின் மூலம், பக்தர்கள் தாங்கள் வழங்கும் நன்கொடை குறித்து வெளிப்படைத்தன்மையையும் திருப்தியையும் பெறுவார்கள்.

மேலும், கோயில் நிர்வாகம் பெறப்பட்ட அனைத்து உலோக நன்கொடை குறித்த முறையான ஆவணங்களைப் பராமரிக்கும். இது பொருட்களை வகைப்படுத்துவதற்கும், அவற்றைச் சரியாகப் பராமரிப்பதற்கும் பெரிதும் உதவும்" என்றார்.

உ.பி.யின் தெய்வீக நகரங்களில் ஒன்றாக மதுரா அமைந்துள்ளது. இங்குள்ள ஸ்ரீகிருஷ்ணஜென்மபூமி கோயிலுக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

அப்போது, காணிக்கையாக தங்கம், வெள்ளி, நகைகள் மற்றும் பிற பொருட்களை சமர்ப்பிக்கின்றனர். முன்னதாக, நன்கொடையாக வழங்கப்பட்ட பொருட்களின் தூய்மையைச் சரிபார்க்க வழி இல்லாததால், அவற்றை நிர்வகிப்பதில் சிரமங்கள் ஏற்பட்டன.

தற்போது, இந்த உலோகப் பரிசோதனை இயந்திரங்களின் அறிமுகத்தால், பெறப்படும் நன்கொடைகளைச் சரிபார்க்க முடியும்.

ஸ்ரீகிருஷ்ணஜென்மபூமி கோயில் காணிக்கையில் தங்கம், வெள்ளியின் தூய்மையை சோதிக்க திட்டம்
சர்வதேச அளவில் பாலின இடைவெளி | சொல்... பொருள்... தெளிவு

X