விழிஞ்ஞம் துறைமுகப் பங்கு விற்பனைக்கு அனுமதி பெறாதது ஏன்? - அதானி குழுமத்துக்கு பினராயி கண்டனம்

பினராயி விஜயன் | கோப்புப்படம்
பினராயி விஜயன் | கோப்புப்படம்
Updated on
1 min read

திருவனந்தபுரம்: கேரளாவின் முக்​கி​யத் திட்​ட​மான விழிஞ்​ஞம் துறை​முகத்​தின் பங்​கு​களை, மாநில அரசின் முன் அனு​ம​தி​யின்றி சுவிட்​சர்​லாந்து நிறு​வனத்​துக்கு விற்க அதானி குழு​மம் ஒப்​பந்​தம் செய்​திருக்கிறது. மாநில அரசுடன் ஆலோசிக்​காமல் அதானி குழு​மம் எடுத்த இந்த முடிவு

கண்​டனத்​துக்​குரியது என்று கேரள முன்​னாள் முதல்வர் பின​ராயி விஜயன் தெரிவித்துள்​ளார்.

திரு​வனந்​த​புரத்​தில் செய்​தி​யாளர்​களைச் சந்​தித்த அவர் இது குறித்​துப் பேசி​ய​தாவது: அரசுக்​கும் அதானி குழு​மத்​திற்​கும் இடையே உள்ள ஒப்​பந்​தத்​தின்​படி, விழிஞ்​ஞம் துறை​முகத்​தின் 25% பங்​கு​களை விற்​பனை செய்ய வேண்​டும் என்​றாலே மாநில அரசின் முன்​அனு​மதி கட்​டா​யம் தேவை. அப்​படி​யிருக்​கை​யில், அரசிடம் எந்த அனு​ம​தி​யும் பெறாமல் 49% பங்​கு​களை மாற்​றியமைக்க அதானி குழு​மம் துணிந்​தது எப்​படி? இது முற்​றி​லும் சட்​ட​விரோத​மானது. அது​மட்​டுமின்றி அரசுட​னான ஒப்​பந்​தத்தை மீறும் செய​லாகும் இது.

அதானி​யின் இந்த நடவடிக்​கைக்கு எதி​ராக துறை​முகத் துறையைத் தன் வசம் வைத்​துள்ள முதலமைச்​சர் வி.டி.சதீசன் என்ன நடவடிக்கை எடுக்​கப் போகிறார் என்​ப​தைத் தெளிவுபடுத்த வேண்​டும். இதை ஒரு பெரிய வெளி​நாட்டு முதலீ​டாகச் சிலர் சித்​தரிக்க முயல்​கிறார்​கள். ஆனால், இது அதானி குழு​மம் லாபம் சம்​பா​திப்​ப​தற்​கான ஒரு முயற்சி மட்​டுமே.

உலகின் மிகப்​பெரிய கப்​பல் நிறு​வன​மான எம்​.எஸ்​.சி இந்​தத் துறை​முகத்​தின் பெரும்​பான்​மைப் பங்​கு​களைக் கட்​டுப்​பாட்​டில் எடுத்​தால், விழிஞ்​ஞம் துறை​முகம் அந்த ஒரு தனி நிறு​வனத்​தின் ஏகபோக ஆதிக்​கத்​திற்​குள் சென்​று​விடும். இது வரு​வாய் இழப்​புக்கு வழி​வகுக்​கும். இவ்​வாறு அவர் பேசி​னார். முன்னதாக, பங்கு விற்​பனை தொடர்​பாக அதானி குழு​மம் அரசிடம் எதை​யும் தெரிவிக்​க​வில்லை என்று முதல்வர் வி.டி.சதீசன், சட்​டப்​பேர​வை​யில் கடந்த புதன்கிழமை கூறி​னார்.

பினராயி விஜயன் | கோப்புப்படம்
ஜார்க்கண்டில் ஏற்கெனவே 4 குழந்தைகள் உயிரிழந்த நிலையில் 9 பேருக்கு மூளையை தாக்கும் மலேரியா

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in