

புதுடெல்லி: காங்கிரஸ் எம்.பி.ரேணுகா சவுத்ரி கடந்த மாதம் ஒரு நாயுடன் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடருக்கு வந்ததால் சர்ச்சை ஏற்பட்டது.
இந்நிலையில், மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் (சிஐஎஸ்எப்) தலைமை இயக்குநர் பிரவீர் ரஞ்சன் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “செல்லப் பிராணிகளுக்கு நாடாளுமன்ற வளாகத்திற்குள் அனுமதி இல்லை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
எம்.பி.க்கள் வாகனங்கள் சோதனையிடப்படுவதில்லை. செல்ல பிராணிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சித்து வருகிறோம்” என்றார்.