பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.2.50 உயர்வு - ‘பணவீக்க மனிதர் மோடி’ என ராகுல் விமர்சனம்

பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.2.50 உயர்வு - ‘பணவீக்க மனிதர் மோடி’ என ராகுல் விமர்சனம்
Updated on
1 min read

புதுடெல்லி: பெட்ரோல், டீசல் விலை லிட்​டருக்கு ரூ.2.50 உயர்த்தப்பட்​டுள்​ளது. கடந்த 2 வாரங்​களில் 4-வது முறை​யாக இதன் விலை அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது.

மேற்கு ஆசியப் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை 50% உயர்ந்தது. இதனால் இந்​திய எண்​ணெய் நிறு​வனங்​களுக்கு தினசரி சுமார் ரூ.1,000 கோடி இழப்பு ஏற்​பட்​டது. இதை ஈடு​கட்ட கடந்த 15-ம் தேதி பெட்​ரோல், டீசல் விலை லிட்​டருக்கு தலா ரூ.3 உயர்த்​தப்​பட்​டது. இதையடுத்​து, கடந்த மே 19-ம் தேதி ஒரு லிட்​டர் பெட்​ரோல், டீசல் தலா 90 பைசா அதி​கரிக்​கப்​பட்​டது. 3-வது முறையாக 23-ம் தேதி ஒரு லிட்​டர் பெட்​ரோல் 87 பைசா​வும், ஒரு லிட்​டர் டீசல் 91 பைசா​வும் விலை உயர்த்​தப்​பட்​டது.

இந்​நிலை​யில், எண்​ணெய் நிறு​வனங்​கள் நேற்​றும் பெட்​ரோல் மற்றும் டீசல் விலையை மீண்​டும் உயர்த்​தின. கடந்த 2 வாரங்களில் 4-வது முறை​யாக விலை உயர்த்​தப்​பட்​டுள்​ளது. சென்​னை​யில் பெட்​ரோல் விலை லிட்​டருக்கு ரூ.2.46 உயர்ந்து ரூ.107.77-க்கு விற்​பனை செய்​யப்​படு​கிறது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.57 உயர்ந்து ரூ.99.55-க்கு விற்​பனை​யாகிறது. இதனால் சென்​னை​யில் எரிபொருள் விலை மீண்​டும் புதிய உச்சத்​தைத் தொட்​டுள்​ளது. இது​போல டெல்​லி, மும்பை மற்​றும் கொல்​கத்​தா​விலும் பெட்​ரோல், டீசல் விலை தொடர்ந்து புதிய உச்சத்தை பதிவு செய்​துள்​ளது.

ரூ.1 லட்​சம் கோடி இழப்பு

இந்​நிலை​யில், இந்​திய சிறு​தொழில் மேம்​பாட்டு வங்​கி​யின் (சிட்பி) 37-வது ஆண்டு விழா மும்​பை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில், மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் பேசும்போது, ‘‘மேற்கு ஆசி​யா​வில் நில​வும் நெருக்​கடி என்​பது வெறும் ராஜதந்திர அல்​லது புவி​சார் அரசி​யல் பிரச்​சினை மட்​டுமல்ல, அது சாதாரண மக்​களின் எரிபொருள் செல​வு​களை​யும் அதிகரிக்க வழி​வகுக்​கும்.

கச்சா எண்​ணெய் விலை உயர்ந்​த​போ​தி​லும் உடனடி​யாக பெட்ரோல் மற்​றும் டீசல் விலையை உயர்த்​த​வில்​லை. மாறாக இதன் மீதான கலால் வரி​கள் குறைக்​கப்​பட்​டன. இதன் மூலம் அரசுக்கு ரூ.1 லட்​சம் கோடிக்​கும் அதி​க​மாக வரு​வாய் இழப்பு ஏற்பட்​டுள்​ளது’’ என்றார்.

பணவீக்க மனிதர் மோடி

மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் நேற்று எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், ‘‘பணவீக்க மனிதர் மோடி மீண்​டும் தாக்கியுள்ளார். உங்​கள் பாக்​கெட்​டில் இருந்து அமை​தி​யாகப் பணம் பறிக்​கப்​படு​வதற்​காக, அவர்​கள் பெட்​ரோல்​-டீசல் விலையைத் தவணை முறை​யில் உயர்த்​துகிறார்​கள்’’ என கூறியுள்ளார்.

பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.2.50 உயர்வு - ‘பணவீக்க மனிதர் மோடி’ என ராகுல் விமர்சனம்
கூட்டுறவு வங்கிகளில் குறு விவசாயிகள் பெற்ற ரூ.50,000 பயிர்க் கடன் தள்ளுபடி - முதல்வர் விஜய் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in