வாக்களிப்பதை கட்டாயமாக்க கோரும் மனு நிராகரிப்பு

வாக்களிப்பதை கட்டாயமாக்க கோரும் மனு நிராகரிப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: அஜய் கோயல் என்பவர் தாக்​கல் செய்த பொதுநல மனுவை விசா​ரித்த உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் தலை​மையி​லான அமர்வு கூறிய​தாவது:

வாக்​களிக்க வாக்​காளர்​கள் செல்​ல​வில்லை என்​றால் நீதி​மன்​றம் என்ன செய்ய முடி​யும்? வாக்​களிக்க மறுப்​பவர்​களை கைது செய்ய உத்​தர​விட முடி​யு​மா? சட்​டத்​தின் ஆட்சி நடை​பெறும் நாட்டில் ஒவ்​வொரு வாக்​காளர்​களும் வாக்​களிக்க வேண்​டும்.

இது விழிப்​புணர்வு சார்ந்த விவ​காரம் என்​ப​தால் உரிய விழிப்புணர்வை ஏற்​படுத்த வேண்​டும். வாக்​களிக்க கட்டாயப்படுத்த முடி​யாது. இந்த மனு தள்​ளு​படி செய்யப்படுகிறது. இவ்​வாறு நீதிப​தி​கள்​ உத்​தர​விட்​டனர்​.

வாக்களிப்பதை கட்டாயமாக்க கோரும் மனு நிராகரிப்பு
கோவை வடக்கு தொகுதியில் வாகை சூடப்போவது யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in