மேகேதாட்டு அணை கட்ட அனுமதி அளிக்கக் கூடாது: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் மனு மீது ஆக.31-ல் விசாரணை

மேகேதாட்டு அணை கட்ட அனுமதி அளிக்கக் கூடாது: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் மனு மீது ஆக.31-ல் விசாரணை
Updated on
2 min read

புதுடெல்லி: மேகேதாட்டு அணைத் திட்ட விவ​காரத்​தில் காவிரி நீர் மேலாண்மை ஆணை​யம் எந்​த​வித அனு​ம​தியோ அல்​லது உத்தர​வையோ பிறப்​பிக்​கக் கூடாது எனத் தடை விதிக்​கக் கோரி தமிழக அரசு தாக்​கல் செய்த மனு, வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி உச்ச நீதி​மன்​றத்​தில் விசா​ரணைக்கு வரு​கிறது.

மேகே​தாட்டு அணை விவ​காரம் தொடர்​பாக தமிழ்​நாடு அரசு உச்ச நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​துள்ள மனு​வில் தெரிவிக்கப்பட்டிருப்​ப​தாவது: காவிரி படுகை என்​பது ஒரு பற்றாக்​குறை படு​கை​யாகும். இதனால் சிறிய அளவி​லான நீர் திட்டங்​களுக்​குக் கூட அனு​மதி அளிக்க முடி​யாது என காவிரி நதிநீர் தீர்ப்​பா​யம் ஏற்​க​னவே தெளிவுபடுத்​தி, கர்​நாட​கா​வின் கோரிக்​கையை முற்​றி​லும் நிராகரித்​துள்​ளது.

காவிரி படு​கை​யில் தண்​ணீர் பற்​றாக்​குறை நில​வும் சூழலில், புதிய திட்​டங்​களைச் செயல்​படுத்த முற்​படு​வது உச்ச நீதி​மன்​றத்​தின் இறு​தித் தீர்ப்பை மீறும் செய​லாகும். கீழ் பாசன மாநிலங்​களுக்கு நீர் விநி​யோகம் பாதிக்​கும் வகை​யில் எந்​தவொரு புதிய திட்​டத்​தை​யும் மேல் பாசன மாநிலங்​கள் செயல்​படுத்​தக் கூடாது என்று உச்ச நீதி​மன்​றம் தெளி​வாகக் கூறி​யுள்​ளது. அதே​போல, காவிரி நீர் விவ​காரத்​தில் தீர்ப்பை நடை​முறைப்​படுத்த மட்​டுமே காவிரி நீர் மேலாண்மை ஆணை​யத்​திற்கு அதி​காரம் வழங்​கப்​பட்​டுள்​ளது.

மாறாக, காவிரி படு​கை​யில் புதிய திட்​டங்​களை ஆய்வு செய்ய அதி​காரம் அளிக்​கும் வழி​காட்​டு​தல்​கள் வழங்​கு​வது உச்ச நீதி​மன்றத் தீர்ப்​பை பயனற்​ற​தாக்​கி​விடும். எனவே காவிரி​யில் புதிய நீர் திட்​டங்​களை ஆய்வு செய்​வது, அனு​மதி வழங்​கு​வது உள்​ளிட்ட விவ​காரங்​களில் காவிரி நீர் மேலாண்மை ஆணை​யம் மற்​றும் மத்திய நீர் ஆணை​யம் ஆகிய​வற்​றிற்கு கொடுக்​கப்​பட்​டுள்ள வழி​காட்​டு​தல்​களை ரத்து செய்ய வேண்​டும்.

காவிரி ஆற்​றின் குறுக்கே கர்​நாடக அரசால் கட்​டப்​பட்​டுள்ள அணை​கள் மற்​றும் குளங்​கள் உள்​ளிட்ட ஒருங்​கிணைந்த சேமிப்பு திட்​டங்​கள் மூலம் சுமார் 218 டி.எம்​.சி. நீர் சேமிக்​கப்​படு​கிறது. இது பரு​வ​மழை காலத்​தில் 327 டி.எம்​.சி. ஆக அதி​கரிக்​கும். இந்த கணக்​கீட்​டின்​படி பார்த்​தால், கர்​நாடகா​வுக்கு நீதி​மன்​றத்​தால் ஒதுக்​கப்​பட்ட பங்​கான 284.75 டி.எம்​.சி. நீரை விட இது அதிகமாகும்.

இவ்​வாறு கூடு​தலாகச் சேமிக்​கப்​படும் நீரையே நகரங்​களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்​யப் பயன்​படுத்​திக் கொள்ள முடியும். எனவே, குடிநீர் தேவைக்​காக புதி​தாக ஓர் அணை கட்ட வேண்​டிய அவசி​யமே இல்​லை. புதிய நீர்த்​திட்​டங்​கள் தொடர்​பாக எந்​தவொரு பரிசீலனை​யும் செய்​யத் தேவை​யில்லை என்​பதை உச்ச நீதி​மன்​றம் உறு​திப்​படுத்த வேண்​டும்.

காவிரி ஆற்​றின் குறுக்கே புதிய திட்​டங்​களை மேற்கொள்வதற்கான பரிசீலனை மற்​றும் அனு​மதி உள்​ளிட்ட விவ​காரங்​களில் காவிரி நீர் மேலாண்மை ஆணை​யம் முடிவெடுக்கும் வகை​யில் வழங்​கப்​பட்​டுள்ள வழி​காட்​டு​தல்​களை ரத்து செய்ய வேண்​டும். மேகே​தாட்​டு​வில் அணை கட்​டு​வதற்கு முற்​றி​லும் தடை விதிக்க வேண்​டும்.

இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இந்த மனு வரும் திங்​கட்​கிழமை (ஆகஸ்ட் 31) உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் விக்​ரம் நாத்​, சந்தீப்​ மேத்​தா ஆகியோர்​ அடங்​கிய அமர்​வில்​ வி​சா​ரணைக்​கு வரவுள்​ளது.

மேகேதாட்டு அணை கட்ட அனுமதி அளிக்கக் கூடாது: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் மனு மீது ஆக.31-ல் விசாரணை
அமைச்சர் மரிய வில்சன் இங்கிலாந்து அரசரா? - உயர் நீதிமன்றம் கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in