தென்பெண்ணையாறு நீர் பங்கீடு விவகாரம்: தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

உச்ச நீதிமன்றம் | கோப்புப்படம்
உச்ச நீதிமன்றம் | கோப்புப்படம்
Updated on
2 min read

புதுடெல்லி: தென்​பெண்​ணை​யாறு நீர் பங்​கீட்​டுப் பிரச்​சனையைத் தீர்க்​கப் புதிய தீர்ப்​பா​யம் அமைப்​ப​தற்​குப் பதிலாக, ஏற்​கெனவே பயன்​பாட்​டில் இல்​லாமல் இருக்​கும் மகதாயி நீர் தகராறு தீர்ப்​பா​யத்​திடம் வழக்கை ஒப்​படைக்​கக் கோரிய மத்​திய அரசின் மனுவுக்கு தமிழகம் மற்​றும் கர்​நாடக அரசுகள் 2 வாரத்​தில் பதிலளிக்​கும்​படி உச்​ச நீ​தி​மன்​றம் ஆணை​யிட்​டுள்​ளது.

தென் பெண்​ணை​யாற்​றின் குறுக்கே யல்​கோல் என்ற பகு​தி​யில் கர்​நாடக அரசு அணை கட்ட நடவடிக்கை எடுத்து வந்​தது. அதற்கு தடை விதிக்​கக்​கோரி தமிழக அரசு உச்​ச நீ​தி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தது. அந்த வழக்கை விசா​ரித்த உச்​ச நீ​தி​மன்​றம், இரு மாநிலங்​களுக்​கிடையே சமரச பேச்சு வார்த்தை நடத்த மத்​திய அரசுக்கு அறிவறு​தல் வழங்​கியது. ஆனால் அந்த சமரச பேச்​சு​வார்த்​தை​யில் இரு மாநிலங் களுக்​கிடையே உடன்​பாடு எட்​டப்​பட​வில்லை என மத்​திய அரசு உச்​ச நீ​தி​மன்​றத்​தில் தெரி​வித்​தது.

இதனையடுத்​து, தமிழகம் மற்​றும் கர்​நாடகா மாநிலங்​களுக் கிடையே​யான தென்​பெண்​ணை​யாறு நீர் பங்​கீட்​டுப் பிரச்​சனையைத் தீர்ப்​ப​தற்​காக தனித் தீர்ப்​பா​யம் அமைக்க வேண்​டும் என கடந்த பிப்​ர​வரி 2-ம் தேதி​உச்​சநீ​தி​மன்​றம் மத்​திய அரசுக்கு உத்​தர​விட்​டது.

இந்​நிலை​யில், தென்​பெண்​ணை​யாறு நீர் பங்​கீட்​டுப் பிரச்​சினையைத் தீர்க்​கப் புதிய தீர்ப்​பா​யம் அமைப்​ப​தற்​குப் பதிலாக, ஏற்​க​னவே பயன்​பாட்​டில் இல்​லாமல் இருக்​கும் மகதாயி நீர் தகராறு தீர்ப்​பா​யத்​திடம் வழக்கை ஒப்​படைக்​கக்​கோரி மத்​திய அரசு புதிய மனுவை உச்​ச நீ​தி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​தது, அந்த மனு​வில், கால தாமதத்​தைத் தவிர்க்​க​வும், விரை​வாக​வும் சிக்​க​ன​மாக​வும் முடி​வெடுக்​க​வும் இந்த நடவடிக்கை உதவும் எனக் கூறப்​பட்​டிருந்​தது

இந்த மனு, நீதிப​தி​கள் விக்​ரம் நாத் மற்​றும் சதீப் மேத்தா ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது மத்​திய அரசின் தலைமை வழக்​கறிஞர் ஆர்​.வெங்​கட்​ரமணி ஆஜராகி, தென்​பெண்​ணை​யாறு விவ​காரத்​தில் புதிய தீர்ப்​பா​யத்​திற்​கான உள்​கட்​டமைப்​பு​களை உரு​வாக்​கு​வது கால தாமதத்தை ஏற்​படுத்​தும். எனவே, தற்​போது பணி இல்​லாமல் இருக்​கும் மகதாயி நடு​வர் மன்​றத்​திடம் தென்​பெண்​ணை​யாறு விவ​காரத்தை ஒப்​படைக்​கலாம். இதன் மூலம் வழக்கு விரை​வாக​வும், சிக்​க​ன​மான முறை​யிலும் முடிவுக்கு வரும். எனவே உச்​ச நீ​தி​மன்​றத்​தின் பிப்​ர​வரி 2ம் உத்​தர​வில் மாற்​றங்​களைச் செய்ய வேண்​டுமென கோரிக்கை வைத்​தார்.

மத்​திய அரசின் இந்​தக் கோரிக்​கைக்​குக் கடுமை​யான எதிர்ப்பு தெரி​வித்த தமிழக அரசு தரப்பு மூத்த வழக்​கறிஞர் உமாப​தி, “தென்​பெண்​ணை​யாறு விவ​காரத்​திற்கு நிரந்​தர​மான தனித் தீர்ப்​பா​யம் அமைப்​பது மட்​டுமே சரி​யான தீர்​வாக அமை​யும். ஏற்​க​னவே உள்ள தீர்ப்​பா​யத்​தைப் பயன்​படுத்​தும் போது தலை​வர்​கள் மற்​றும் உறுப்​பினர்​கள் நியமனத்​தில் பல்​வேறு சட்ட சிக்​கல்​கள் ஏற்​படும்” என்று திட்​ட​வட்​ட​மாக வாதிட்​டார்.

அப்​போது கர்​நாடக அரசு தரப்பு வழக்​கறிஞர், மத்​திய அரசின் மனுவுக்கு எழுத்​துப்​பூர்​வ​மாக பதிலளிப்​ப​தாக தெரி​வித்​தார். அனைத்து தரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி​கள், ‘தென்​பெண்​ணை​யாறு நீர் பங்​கீட்​டுப் பிரச்​சினையை மகதாயி தீர்ப்​பா​யத்​திடம் ஒப்​படைப்​பது தொடர்​பான மத்​திய அரசின் மனு மீது தமிழக மற்​றும் கர்​நாடக மாநில அரசுகள் 2 வார காலத்​துக்​குள் பதில் மனு தாக்​கல்​ செய்​ய உத்​தர​விட்​டு, வழக்​கின்​ வி​சாரணையை ஒத்​திவைத்​தனர்​.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in