“சத்தீஸ்கரில் நக்சல் தீவிரவாதம் முடிவுக்கு வந்தது” - மாநிலம் உருவான தினத்தில் பிரதமர் மோடி பெருமிதம்

‘அமைதி, நம்பிக்கை மலர்ந்துள்ளது’
“சத்தீஸ்கரில் நக்சல் தீவிரவாதம் முடிவுக்கு வந்தது” - மாநிலம் உருவான தினத்தில் பிரதமர் மோடி பெருமிதம்
Updated on: 
1 min read

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கர் மாநிலத்​தில் ஒரு காலத்​தில் ‘ரெட் காரிடார்’ (நக்சல் பாதிப்​புப் பகுதி​கள்) என்று அழைக்​கப்​பட்ட பகுதி​கள், தற்போது அமைதி, நம்​பிக்கை மற்​றும் வளர்ச்​சி​யின் மையங்களாக உரு​வெடுத்​துள்​ளன என்று பிரதமர் நரேந்​திர மோடி தெரிவித்துள்ளார்.

சத்​தீஸ்​கர் மாநிலம் உரு​வான தினத்தை முன்​னிட்டு முதல்​வர் விஷ்ணு தேவ் சாய்க்கு பிரதமர் நரேந்​திர மோடி எழுதிய கடிதத்தில் கூறி​யிருப்​ப​தாவது: சத்​தீஸ்​கர் மாநிலத்​தின் முன்னேற்றத்​துக்கு மாவோயிஸ்ட் வன்​முறை நீண்ட காலமாக மிகப் பெரிய தடை​யாக இருந்​தது.

தற்​போது நிலைமை முற்​றி​லும் மாறி​விட்​டது. சில ஆண்​டுகளுக்கு முன்பு நக்​சலிசத்​தின் சிவப்பு வழித்​தடம் என அறியப்​பட்ட பகுதிகள் இன்று அமைதி, நம்​பிக்கை, வளர்ச்​சி​யின் புதிய மையங்​களாகி வரு​கின்​றன. இந்த மாற்​றம் இணைப்பு வசதி​கள், நவீன உள்​கட்​டமைப்​பின் விரிவாக்​கத்தை விரைவுபடுத்​தி​யுள்​ளது.

25 ஆண்​டுகளுக்கு முன்பு டெல்லி - ராய்ப்​பூர் இடையே ஒரே ஒரு விமானம் மட்​டுமே இயங்​கிய நிலை​யில், தற்​போது மாநிலத்​தில் 4 நவீன விமான நிலை​யங்​கள் இயங்கி வரு​கின்​றன. மேலும், சத்​தீஸ்கரில் ரூ.51,000 கோடிக்கு மேல் ரயில் திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன. வந்தே பாரத், அம்​ரித் பாரத் ரயில் சேவை​களும் தொடங்​கப்​பட்​டுள்​ளன. இத​னால் ராய்ப்​பூர் – பிலாஸ்​பூர் பயண நேரம் பாதி​யாகக் குறைந்​துள்​ளது. புதிய விரைவுச் சாலைகள் மூலம் தொழிலும் வேலை​வாய்ப்​பும் பெருகும்.

பிரதமரின் கரீப் கல்​யாண் அன்ன யோஜனா மற்​றும் மாநில அரசுத் திட்​டங்​கள் மூலம் 73 லட்​சம் குடும்​பங்​களுக்கு இல​வச உணவு தானியம் வழங்​கப்​படு​கிறது. கிராமப்​புறம் மற்​றும் நகர்ப்​புறங்​களில் 22 லட்​சம் வீடுகள் கட்​டப்​பட்​டுள்​ளன. 41 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட கிராமப்​புறக் குடும்​பங்​களுக்கு குழாய் குடிநீர் இணைப்பு வழங்​கப்​பட்​டுள்​ளது.

மாநிலத்​தின் நெல் கொள்​முதல் முறை 25 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட விவசாயிகளுக்கு மேம்​பட்ட விலையை அளித்து, கிராமப்​புறப் பொருளாதா​ரத்தை வலுப்​படுத்து​கிறது. மஹ்தாரி வந்​தன் யோஜனாவின் கீழ் 68 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட பெண்​களுக்கு மாதந்​தோறும் ரூ 1,000 வழங்​கப்​படு​கிறது. நவா ராய்ப்​பூர் ஒரு நவீன நகர​மாக உரு​வாகி வரு​கிறது.

மருந்​துத் தயாரிப்பு, ஜவுளி, தகவல் தொழில்​நுட்​பம், மின்​சா​ரம், அலுமி​னியம், எஃகு போன்ற துறைகளில் வாய்ப்​பு​கள் பரிசீலிக்​கப்​பட்டு வரு​கிறது. நியாத் நெல்​லநார், வாழ்​வாதார மேம்​பாட்​டுத் திட்​டங்​கள், முதலமைச்​சர் ஸ்​வஸ்த் பஸ்​தர் ஆகிய முயற்​சிகள் மக்​களுக்கு அடிப்​படை வசதி​களைக் கொண்டு சேர்க்க உதவுகிறது. பஸ்​தர் இன்று அமைதி, நல்​லாட்சி, செழிப்பு என்ற புதிய பாதையில் முன்​னேறிச் செல்​கிறது. இவ்​வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

“சத்தீஸ்கரில் நக்சல் தீவிரவாதம் முடிவுக்கு வந்தது” - மாநிலம் உருவான தினத்தில் பிரதமர் மோடி பெருமிதம்
ஜெர்மனியில் தீவிரமடையும் ஜென்-ஸி போராட்டம்: பிராங்க்பர்ட்டில் கடைகள் சூறை, காவல் துறையினர் மீது தாக்குதல்

X