தவெக தலைவர் விஜய்க்கு பவன், லோகேஷ் வாழ்த்து

தவெக தலைவர் விஜய்க்கு பவன், லோகேஷ் வாழ்த்து
Updated on
1 min read

விஜயவாடா: தமிழக சட்​டப்​பேரவை தேர்​தல் விஜய் தலைமையிலான தவெக வெற்றி பெற்றுள்ளது.

இது குறித்து ஆந்​திர துணை முதல்​வரும் ஜனசேனா கட்​சித் தலை​வரு​மான பவன் கல்​யாண் வெளி​யிட்​டுள்ள செய்​தி​யில், ”தமிழ்​நாட்​டில் விஜய் பெரும்​பான்​மை​யான மக்​களின் மனதை வென்​று, வெற்​றிக் கனியை பறித்​துள்​ளார். கட்​சியை தொடங்​கிய சிறிது காலத்​திலேயே மாபெரும் வெற்​றியை ருசித்த விஜய்யை நான் மனதார வாழ்த்​துகிறேன்” என்று கூறி​யுள்​ளார்.

ஆந்திர முதல்வர் சந்​திர​பாபு நாயுடு​வின் மகனும், கல்வி அமைச்சரு​மான லோகேஷ் தனது சமூக வலை​தளப் பதி​வில், ”விஜய் அரசி​யல் அரங்​கேற்​றமே அதிரடி​யாக உள்​ளது. தமிழகத்தில் இளைய சமு​தாய வாக்​காளர்​களின் ஒட்​டுமொத்த வெற்றி இது. பொது வாழ்க்​கை​யில் ஈடு​பட்​டு, பொறுப்​பு​கள், கடமை​களு​டன் வெற்றி நடை போட தவெக தலை​வர் விஜய்க்கு எனது வாழ்த்​துகள்” என்று கூறி​யுள்​ளார்.

ஆந்​திர முன்​னாள் முதல்​வர் ஜெகன்​மோகன் ரெட்டி, ”பொது வாழ்க்​கை​யில் புதிய அத்​தி​யா​யத்தை வெற்​றிகர​மாக தொடங்கியுள்ள சகோ​தரர் விஜய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்​றார்​.

தவெக தலைவர் விஜய்க்கு பவன், லோகேஷ் வாழ்த்து
யார் இந்த ஜோசப் விஜய்? - தமிழகத்தில் தடம் பதித்த தவெக தலைவரின் பின்புலம்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in