நாடாளுமன்ற அமளியால் இதுவரை ரூ.57 கோடி இழப்பு

நாடாளுமன்ற அமளியால் இதுவரை ரூ.57 கோடி இழப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: நாடாளு​மன்ற பட்​ஜெட் கூட்​டத் தொடர் தற்​போது நடை​பெற்று வரு​கிறது. குடியரசுத் தலை​வர் உரைக்கு நன்றி தெரிவிக்​கும் தீர்​மானத்​தின் மீது விவாதம் கடந்த 2-ம் தேதி தொடங்​கியது. அப்​போது சீனா-எல்​லைப் பிரச்​சினை தொடர்​பாக முன்​னாள் ராணுவ தளபதி நரவனே எழுதி வெளிவ​ராத புத்​தகத்​தில் உள்ள தகவல்​களை மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்தி மேற்​கோள் காட்​டி​னார்.

இதற்கு அனு​மதி மறுக்​கப்​பட்​ட​தால் எதிர்க்​கட்சி உறுப்​பினர்​கள் அமளி​யில் ஈடு​பட்​டனர். இந்த விவ​காரத்​தில் 8 எம்.பி.க்கள் இடை நீக்​கம் செய்​யப்​பட்டனர். இந்த விவ​காரம் தொடர்​பாக நாடாளுமன்​றத்​தில் கடந்த சில நாட்​களாக அமளி தொடர்​கிறது. இதனால் மக்​களவை ஒத்​திவைக்​கப்​பட்டு வரு​கிறது.

நாடாளு​மன்​றம் செயல்பட ஒரு நிமிடத்​துக்கு ரூ2.5 லட்​ச​மும், ஒரு மணி நேரத்​துக்கு ரூ.1.5 கோடி​யும், நாள் ஒன்​றுக்கு ரூ.9 கோடி​யும் செல​வாகிறது என மதிப்​பிடப்​பட்​டுள்​ளது.

பட்​ஜெட் கூட்​டத் தொடர் தொடங்​கிய​திலிருந்து இது​வரை மக்​களவை 30 முதல் 35 மணி நேரம் செயல்​பட்​டிருக்க வேண்​டும். இதில் 20 முதல் 25 மணி நேரம் அமளி காரண​மாக வீணாகி​யுள்​ளது. இதனால் மக்​களவை இழப்பு மட்​டும் ரூ.30 முதல் ரூ.35 கோடி இருக்​கும் என மதிப்​பிடப்​பட்​டுள்​ளது.

இதே​போல் மாநிலங்​களவை​யில் அமளி காரண​மாக 12 முதல் 15 மணி நேரம் வீணாகி​யுள்​ளது. இங்கு ஏற்​பட்ட இழப்பு ரூ.18 முதல் ரூ.22 கோடி இருக்​கும் என மதிப்​பிடப்​பட்​டுள்​ளது. மொத்​தத்​தில் நாடாளு​மன்​றத்​தின் இரு அவை​களி​லும் ஏற்​பட்ட அமளி காரண​மாக பட்​ஜெட் கூட்​டத் தொடர் தொடங்​கிய​தில் இருந்து இது​வரை ரூ.57 கோடி இழப்பு ஏற்​பட்​டிருப்ப​தாக மதிப்​பிடப்​பட்​டுள்​ளது.

நாடாளுமன்ற அமளியால் இதுவரை ரூ.57 கோடி இழப்பு
திரு​மலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய நிர்வாக அதிகாரியாக எம்.ரவிச்சந்திரா பதவியேற்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in