

புதுடெல்லி: நிலக்கரி, சுரங்கங்கள் மற்றும் எஃகு தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திறந்தவெளி நிலக்கரி சுரங்கங்களை போலவே நிலத்தடி நிலக்கரி சுரங்கங்களுக்கும் அனுமதி வழங்குவது சிக்கல் நிறைந்ததாக உள்ளது. நிலத்தடி நிலக்கரிச் சுரங்கம் நிலப் பயன்பாட்டை குறைக்கிறது. இதன் மூலம் காடுகள் மற்றும் உள்கட்டமைப்புகள் பாதுகாக்கப்படுகின்றன.
நில சீரமைப்பு செலவுகள் மற்றும் மறைமுக பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை குறைக்கிறது. ஆழத்தில் உள்ள தரமான நிலக்கரியை அணுக முடிகிறது. வானிலை மாற்றம் ஏற்பட்டாலும் ஆண்டு முழுவதும் செயல்படுவதை உறுதி செய்ய முடிகிறது. மேலும் சுற்றுச்சூழல் தாக்கம் குறைவாக உள்ளது.
இந்நிலையில் நிலத்தடி நிலக்கரி சுரங்கங்களுக்கான அனுமதி நடைமுறைகள் சிக்கலானதாக இருப்பதால் திட்டப் பணிகளில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனவே நிலத்தடி நிலக்கரி சுரங்கங்களுக்கு அனுமதி வழங்குவதற்கான கொள்கை மற்றும் விதிமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.