மம்தா, உத்தவ் கட்சிகளின் பிளவால் புதுமுகம் பெறும் நாடாளுமன்றம்

திமுகவில் இருந்து காங்கிரஸ் பிரிந்ததால் வலுவிழக்கும் இண்டியா கூட்டணி
மம்தா பானர்​ஜி | உத்​தவ் தாக்​கரே

மம்தா பானர்​ஜி | உத்​தவ் தாக்​கரே

Updated on
1 min read

புதுடெல்லி: ​​நா​டாளு​மன்ற மழைக்​காலக் கூட்​டத்​தொடர் இன்று தொடங்​கு​கிறது. ஆனால், கடந்த கால நாடாளு​மன்​றத்தை விட இந்த நாடாளு​மன்ற கூட்​டத்​தொடர் புது பரி​மாணம் பெற்​றுள்​ளது.

மேற்கு வங்க தேர்​தலில் தோல்வி அடைந்த திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யில் (டிஎம்​சி), மொத்​தம் உள்ள 29 எம்​.பி.க்​களில் 20 பேர் நேஷனலிஸ்ட் சிட்​டிசன்ஸ் பார்ட்டி ஆஃப் இந்​தி​யா (என்​சிபிஐ) என்ற கட்​சி​யில் இணைந்​தனர்.

இது கட்​சி​யின் தலை​வர் மம்தா பானர்​ஜிக்கு பெரும் பின்னடைவாக உள்​ளது. அதிருப்தி எம்​.பி.க்​கள் 20 பேருக்​கும் தனி இருக்​கைகளை மக்​களவை சபா​நாயகர் ஓம் பிர்​லா​வும் ஒதுக்கிவிட்டார். ஆனால், என்​சிபிஐ கட்சி அங்​கீ​காரம் நிலுவையில் உள்​ளது.

எனவே, சயோனி கோஷ் மற்​றும் யூசுப் பதான் போன்ற திரிணமூல் எம்​.பி.க்​கள் இனி மம்​தா​வின் மரு​மகன் அபிஷேக் பானர்​ஜி​யுடன் காணப்பட மாட்​டார்​கள். இது​வரை மக்​களவை​யில் டிஎம்சி காட்​டிய எதிர்ப்பு இனி இருக்​குமா என்ற கேள்​வி​யும் எழுந்துள்​ளது.

உத்​தவ் தாக்​கரே தலை​மையி​லான சிவசேனா (யுபிடி) பிரிவைச் சேர்ந்த 6 எம்​.பி.க்​கள் இனி ஷிண்டே தலை​மையி​லான சிவசேனாவுடன் காணப்​படு​வார்​கள். இதை சபா​நாயகர் பிர்லா அங்​கீகரித்​துள்​ளார். இதன் காரண​மாக, ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்​.பி.க்​களின் எண்​ணிக்கை மக்களவை​யில் 7-ல் இருந்து 13 ஆக உயர்ந்​துள்​ளது. தற்​போது உத்தவ் அணி​யில் 3 எம்​.பி.க்​கள் மட்​டுமே உள்​ளனர். இந்நிலையில் அதிருப்தி எம்​.பி.க்​களின் பதவி​களைப் பறிக்க வேண்​டும் என்று மம்​தா​வின் டிஎம்​சி, உத்​த​வின் சிவசேனா (யுபிடி) கட்​சிகள் வலி​யுறுத்தி வரு​கின்​றன. இது தொடர்​பாக இன்​னும் முடிவு எடுக்​கப்​பட​வில்​லை.

இதற்கு முன்​ன​தாக அரசி​யலமைப்பு மற்​றும் சட்ட அம்​சங்​களு​டன் சேர்த்​து, இதே​போன்ற சூழல்​களில் மக்​களவை மற்​றும் மாநிலங்களவை​யின் முன்​னாள் சபா​நாயகர்​கள் எடுத்த முந்தைய முடிவு​கள், நடை​முறை​களை சபா​நாயகர் பரிசீலித்து வரு​கிறார்.

மேலும், தமிழகத்​தில் கூட்​ட​ணி​யில் இருந்து காங்​கிரஸ் விலகியதால், நாடாளு​மன்​றத்​தில் தனி இருக்​கைகளை ஒதுக்க வேண்​டும் என்று திமுக கோரி​யுள்​ளது. இதனால், மக்​களவை​யில் இது​வரை ஒரே குரலில் பேசி வந்த எதிர்க்​கட்​சிகளின் ‘இண்​டி​யா’ கூட்​டணி வலுவிழக்​கும் நிலை ஏற்​பட்​டுள்​ளது.

இது​போன்ற மாற்​றங்​களால் மழைக்​காலக் கூட்​டத்​தொடரின் மக்களவை இருக்​கைகள் முற்​றி​லும் மாறுகின்​றன. இதன்​மூலம், ஆளும் கட்​சிக்​கும் எதிர்க்​கட்​சிக்​கும் இடையி​லான அரசி​யல் சம நிலை​யில் ஒரு புதிய அத்​தி​யாய​மும் தொடங்கி உள்​ளது. இதை ​ மத்​திய அரசு ​சாதக​மாக்​கி, தொகுதி மறு​வரையறை உள்​ளிட்​ட பல முக்​கிய மசோ​தாக்​களை நிறைவேற்​ற தீவிர​மாக உள்​ளது.

<div class="paragraphs"><p><em>மம்தா பானர்​ஜி |&nbsp;உத்​தவ் தாக்​கரே</em></p></div>
கால்பந்து இறுதிப் போட்டிக்காக கேரளா, மேகாலயாவில் விடுமுறை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in