

புதுடெல்லி: டெல்லியில் காற்றுமாசு தொடர்பாக முதல்வர் ரேகா குப்தா தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ்,டெல்லி யூனியன் பிர தேச மூத்த அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்்படி டெல்லி அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் 50 சதவீத ஊழியர்கள் நவம்பர் 1 முதல் பிப்ரவரி 28-ம் தேதி வரை வீடுகளில் இருந்து பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
டெல்லி மாநகராட்சி அலுவலகங்கள் காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரையும், டெல்லி அரசு அலுவலகங்கள் காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரையும் செயல்படும். தனியார் வாகனங்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்த டெல்லி முழுவதும் வாகனநிறுத்த கட்டணம் இருமடங்காக அதிகரிக்கப்படும். மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்தும் இடங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும். இந்த நடைமுறை நவம்பர் 1 முதல் பிப்ரவரி 28 வரை அமலில் இருக்கும்.
கட்டிட மாசு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை வரும் நவம்பர் 1 முதல் ஜனவரி 31 வரை மேற்கொள்ளக்கூடாது. வரும் டிசம்பர் 10 முதல் ஜனவரி 20 வரை புதிய கட்டிடங்களை கட்டக்கூடாது, பழைய கட்டிடங்களை இடிக்கக்கூடாது என்று்ம் அரசு அறிவித்துள்ளது.