அனைத்துக் கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

டெல்லியில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், தேமுதிகவின் சுதீஷ் உள்ளிட்டோர். படம்: பிடிஐ

டெல்லியில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், தேமுதிகவின் சுதீஷ் உள்ளிட்டோர். படம்: பிடிஐ

Updated on
1 min read

புதுடெல்லி: டெல்​லி​யில் நேற்று நடை​பெற்ற அனைத்துக் கட்சி கூட்​டத்​தில் இருந்து எதிர்க்​கட்​சிகள் வெளிநடப்பு செய்​தன.

நாடாளு​மன்ற மழைக்​கால கூட்​டத் தொடரை சுமுக​மாக நடத்​து​வது தொடர்​பாக அனைத்துக் கட்சி கூட்​டத்​துக்கு மத்​திய அரசு அழைப்பு விடுத்​திருந்​தது. இதன்​படி டெல்​லி​யில் நேற்று நடை​பெற்ற கூட்​டத்​தில் காங்​கிரஸ், சமாஜ்​வா​தி, திரிண​மூல் காங்​கிரஸ், திமுக உட்பட 40 கட்​சிகளின் மூத்த தலைவர்​கள் பங்​கேற்​றனர்.

இந்த கூட்டத்​துக்கு மத்​தியபாது​காப்​புத் துறை அமைச்​சர் ராஜ்​நாத்சிங் தலைமை வகித்​தார். மேற்​கு​வங்க சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திரிண​மூல் காங்​கிரஸ் தோல்​வியைத் தழு​வியது. இதையடுத்து, அந்த கட்​சி​யைச் சேர்ந்த 20 எம்.​பி.க்​கள், மம்தா பானர்​ஜிக்கு எதி​ராக போர்க்​கொடி உயர்த்​தினர். பின்​னர் 20 எம்.​பி.க்​களும் திரிபு​ராவை சேர்ந்த தேசி​ய​வாத குடிமக்​கள் கட்​சி​யில் (என்​சிபிஐ) இணைந்​தனர்.

அனைத்துக் கட்சி கூட்​டத்​தில் என்​சிபிஐ கட்​சியை சேர்ந்த 20 எம்​.பி.க்​களும் பங்​கேற்​றனர். இதற்கு எதிர்க்​கட்​சிகள் கடும் ஆட்​பேசம் தெரி​வித்​தன. இந்த விவ​காரம் தொடர்​பாக காங்​கிரஸ் உட்பட அனைத்து எதிர்க்​கட்​சிகளும் வெளிநடப்பு செய்​தன.வெளிநடப்​புக்​குப் பிறகு எதிர்க்​கட்சி தலை​வர்​கள் மீண்​டும் அனைத்துக் கட்சி கூட்​டத்​தில் பங்​கேற்​றனர். அப்​போது நாடாளு​மன்​றத்​தின் இரு அவை​களை​யும் சுமுக​மாக நடத்​து​வது குறித்து விரி​வாக ஆலோ​சிக்​கப்​பட்​டது.

‘நாடாளு​மன்​றத்​தில் எதிர்க்​கட்​சிகளுக்கு உரிய நேரம் ஒதுக்​கப்பட வேண்​டும். மக்​கள் பிரச்​சினை​கள் குறித்து விவா​திக்க அனு​மதி வழங்க வேண்​டும்’ என்று எதிர்க்​கட்​சிகள் தரப்​பில் வலி​யுறுத்​தப்​பட்​டது. ‘எதிர்க்​கட்​சிகளின் அனைத்து கேள்வி​களுக்​கும் பதில் அளிக்க மத்​திய அரசு தயா​ராக உள்​ளது. மக்​களின் நலன் கருதி இரு அவை​களிலும் ஆக்​கப்​பூர்​வ​மாக விவாதங்​களை மட்​டுமே நடத்த வேண்​டும்’ என்று மத்​திய அரசு தரப்​பில் வலி​யுறுத்​தப்​பட்​டது.

கூட்​டத்​துக்​குப் பிறகு செய்தியாளர்களிடம் நாடாளு​மன்ற விவ​காரத் துறை அமைச்​சர் கிரண் ரிஜிஜு கூறும்​போது, “அனைத்துக் கட்சி கூட்​டத்​தில் ஆக்​கப்​பூர்​வ​மான ஆலோ​சனை​கள் பரி​மாறப்​பட்​டன. நாடாளு​மன்​றத்தை சுமுக​மாக நடத்​து​வது அனைத்து கட்​சிகளின் பொறுப்​பு’’ என்று தெரி​வித்​தார்.

இதற்கிடையே, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் டெல்லியில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அவர், ‘‘மக்களவையின் மாண்பை அனைத்து உறுப்பினர்களும் பாதுகாக்க வேண்டும். அவையை சுமுகமாக நடத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஆக்கப்பூர்வமான விவாதங்களை நடத்த வேண்டும்’’ என்று மக்களவை எம்.பி.க்களுக்கு அறிவுறுத்தினார்.

<div class="paragraphs"><p>டெல்லியில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், தேமுதிகவின் சுதீஷ் உள்ளிட்டோர். படம்: பிடிஐ</p></div>
உண்ணாவிரதப் போராட்டத்தை அரசு ‘அணுகும்’ முறை - சட்டம் சொல்வது என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in