விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு - பாஜக ரியாக்‌ஷன் என்ன?

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு - பாஜக ரியாக்‌ஷன் என்ன?
Updated on
1 min read

புதுடெல்லி: “​ஜனநாயகன் திரைப்​படத்​துக்கு தணிக்கை சான்று வழங்​காமல் தடுப்​பது, தமிழ் கலாச்​சா​ரத்​தின் மீதான தாக்குதலாகும்” என்று மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் குற்றம் சாட்​டி​யுள்​ளார்.

நடிகர் விஜய் நடித்த ‘ஜன​நாயகன்’ திரைப்​படம் கடந்த 9-ம் தேதி வெளி​யிடப்​படும் என்று அறிவிக்​கப்​பட்​டது. ஆனால், இந்​தப் படத்​தில் ஆட்​சேபனைக்​குரிய கருத்​துகள் இருப்​ப​தாக கூறப்​படு​கிறது.

இதற்கு தணிக்கை சான்று வழங்​கு​வ​தில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பட வெளி​யீடு தள்ளி வைக்​கப்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில், ஜனநாயகன் படத்​துக்கு தணிக்கை சான்​றிதழ் வழங்காமல், மத்​திய அரசு முடக்​கி​யுள்​ளது என்ற சர்ச்சை எழுந்துள்​ளது.

இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் வலை​தளப் பக்​கத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில், “ஜன​நாயகன் திரைப்​படத்தை மத்​திய அரசு முடக்​கி​யிருப்​பது, தமிழ் கலாச்​சா​ரத்​தின் மீது நடத்​தப்​படும் தாக்​குதலாகும். பிரதமர் மோடி அவர்​களே, தமிழ் மக்​களின் குரலை ஒடுக்​கும் இந்த முயற்​சி​யில் நீங்​கள் வெற்றி பெற மாட்டீர்கள்” என்று தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து பாஜக செய்​தித் தொடர்​பாளர் சி.ஆர்​.கேசவன் தனது எக்ஸ் வலை​தளப் பக்​கத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “வெட்​கமற்ற பழக்க வழக்​க​முள்ள பொய்​யர் மற்​றும் போலி செய்​தி​களை விற்பவர் ராகுல் காந்​தி.

மத்​தி​யில் காங்​கிரஸ் தலை​மையி​லான யுபிஏ ஆட்​சி​யில்​ தான் ஜல்​லிக்​கட்​டுக்கு தடை விதிக்​கப்​பட்​டது. ஜல்​லிக்​கட்டு காட்டுமிராண்​டித்​தன​மானது என்று காங்​கிரஸ்​காரர்​கள் கூறி தமிழர்​களின் உணர்​வு​கள், கலாச்​சா​ரம், பெருமை போன்​றவற்றை அவம​தித்​தனர்.

காங்​கிரஸ் அரசு​ தான் ஜல்​லிக்​கட்டை கடுமை​யாக எதிர்த்​தது. ஆனால், ஜல்​லிக்​கட்​டுக்கு பிரதமர் மோடி ஆதர​வளித்​தார். அதன்​பிறகு ஜல்​லிக்​கட்​டுக்​கான தடை நீக்​கப்​பட்​டது. அதற்​காக அவருக்கு நன்றி தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்பட விவ​காரம் நீதி​மன்​றத்​தில் உள்​ளது. ராகுல் காந்தி இப்​போது வெளி​யிட்​டுள்ள கருத்​து, அவரது உள்​நோக்​கத்​தை காட்​டு​கிறது” என்​று தெரி​வித்​துள்​ளார்.

பாஜக தேசிய மகளிரணி தலை​வர் வானதி சீனி​வாசன் எம்​.எல்.ஏ கூறும்போது, “காங்​கிரஸ் ஆட்சி காலத்​தில், ஒரிஜினல் பராசக்தி திரைப்​படம் வந்​தது. கருணாநிதி வசனத்​தில் சிவாஜி கணேசன் நடித்​திருந்​தார். அந்த திரைப்​படத்​திற்கு இரண்டு நாட்​கள் மவுண்ட் ரோடில் உள்ள திரையரங்​கில் சென்​சார் செய்து 130 கட் கொடுத்தார்கள்.

அப்​படிப்​பட்ட பாரம்​பரி​யத்தை வைத்​திருக்​கும் ராகுல் காந்​தி, எமர்​ஜென்​சியை கொண்டு வந்து குரல்​வளையை நெறித்த காங்​கிரஸ் கட்சி​யைச் சேர்ந்த ராகுல் காந்தி 'ஜனநாயகன்' படத்தை பேசுகின்றார்” என்று கூறியுள்ளார்.

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு - பாஜக ரியாக்‌ஷன் என்ன?
19-ம் தேதி டெல்லியில் மீண்டும் ஆஜராக விஜய்க்கு சிபிஐ சம்மன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in