கேதார்நாத், பத்​ரி​நாத் கோயில் காணிக்கை திருட்டு வழக்கு

அதி​காரி​கள் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசு உத்​தரவு
கேதார்நாத், பத்​ரி​நாத் கோயில் காணிக்கை திருட்டு வழக்கு
Updated on
2 min read

புதுடெல்லி: உத்​த​ராகண்ட் மாநிலத்​தில் உள்ள கேதார்​நாத் மற்றும் பத்​ரி​நாத் கோயில்​களில் நடந்​துள்ள நிதி முறைகேடுகளில் ஈடு​பட்​ட​வர்​கள் மீது கடுமை​யான சட்​டப்​பூர்வ நடவடிக்கை எடுக்க உத்​த​ராகண்ட் அரசு உத்​தரவு பிறப்பித்துள்ளது.

கேதார்​நாத் கோயில் நிர்​வாகத்​தில் விஐபி விருந்​தினர்​களின் தங்குமிடம், உணவு மற்​றும் இதர செல​வு​களுக்​காகக் கோயி​லின் பொது நிதியி​லிருந்து முறை​யான ஒப்​புதல் பெறாமல் முன்​தொகை வழங்​கப்​பட்​டுள்​ளது. இது நிதி நிர்​வாகத்​தில் நடந்​துள்ள மிகப்​பெரிய விதி​மீறல் என முதற்​கட்ட விசா​ரணை அறிக்கை உறுதி செய்​துள்​ளது.

இது தொடர்​பாகச் சுற்​றுலாத் துறை துணைச் செய​லா​ளர் அனில்குமார் பாண்டே அனுப்​பிய கடிதத்​தின் அடிப்​படை​யில், அப்போதைய கோயில் மேலா​ளர், முதன்​மைப் பொறுப்பு அதிகாரி, முதன்​மைச் செயல் அதி​காரி ஆகியோர் மீது ‘ஸ்ரீபத்ரிநாத் - கேதார்​நாத் கோயில் கமிட்டி சட்​டம் 1939’-ன் படி தகுந்த நடவடிக்கை எடுக்க தற்​போதைய முதன்​மைச் செயல் அதிகாரிக்கு அரசு உத்​தர​விட்​டுள்​ளது.

மற்​றொரு சம்​பவ​மாக, பத்​ரி​நாத் கோயி​லில் கடந்த ஜூலை 2ம் தேதி பக்​தர்​கள் செலுத்​திய காணிக்​கைப் பணம் எண்​ணப்​பட்​ட​போது பெரும் திருட்டு வெளிச்​சத்​திற்கு வந்​தது. பாது​காப்பு விதிகளை முழு​மை​யாக மீறி காணிக்கை அறையி​லிருந்து பணம் வெளியே கொண்டு செல்​லப்​பட்​டது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது.

இது தொடர்​பாகக் கோயில் பொறுப்பு அதி​காரி யுத்​வீர் புஷ்பவான் அளித்த புகாரின் பேரில் பத்​ரி​நாத் போலீ​ஸார் வழக்குப் ​ப​திவு செய்​தனர். சிறப்பு புல​னாய்​வுக் குழு இந்த வழக்கில் இது​வரை 5 முக்​கிய சாட்​சிகளிடம் நேரடி விசா​ரணை நடத்தி வாக்​கு மூலம் பெற்​றுள்​ளது. மேலும், கடந்த 3 ஆண்​டு​கால கோயில் வங்கி கணக்கு விவரங்​களைக் காவல்​ துறை​யிடம் ஒப்படைக்​கக் கோயில் கமிட்டி முடிவு செய்​துள்​ளது.

ஜூலை 2ம் தேதி பதி​வான சிசிடிவி காட்​சிகளைக் கைப்​பற்​றிப் போலீ​ஸார் ஆய்வு செய்​த​போது அதிர்ச்​சித் தகவல்​கள் வெளியாகின. தற்​காலிகப் பணிநீக்​கம் செய்​யப்​பட்​டுள்ள கோயில் ஊழியர் பிரமோத் நவுடியல், காணிக்கை எண்​ணும் அறையி​லிருந்து ரூ.500, ரூ.100 நோட்​டுக் கட்​டு​கள், தங்​க- வெள்ளிக் காசுகள், புனித​மான சாலி கி​ராமக் கற்​கள் (பூஜைக் கற்கள்) மற்​றும் சுமார் 10 முதல் 12 ஆயிரம் ரூபாய் மதிப்​புள்ள காணிக்கை கவர்​களைத் திருடி, தனது சொந்த அலு​வலக அறையில் பதுக்​கியது கேம​ரா​வில் தெளி​வாகப் பதி​வாகி​யுள்​ளது.

சாமோலி மாவட்ட எஸ்பி சுர்​ஜித் சிங் பன்​வார் கூறுகை​யில், “சிசிடிவி கட்​டுப்​பாட்டு அறை அதி​காரி பன்​வார், காணிக்கை எண்​ணும் போது உடனிருந்த ஹரேந்​தர் கோத்​தாரி உள்ளிட்டோரிடம் விசா​ரணை நடத்​தப்​பட்​டுள்​ள​து. கோயில் நிர்வாகத்​தின் உள்​வி​சா​ரணை அறிக்கை கிடைத்​தவுடன் அடுத்த கட்ட கைது நடவடிக்கை பாயும்” என்​றார்.

இதற்​கிடையே, தன் மீதான சஸ்​பெண்ட் உத்​தர​வை​யும் போலீஸ் வழக்​கை​யும் எதிர்த்து குற்​றம் சாட்​டப்​பட்ட ஊழியர் பிரமோத் நவுடியல் உயர் நீதி​மன்​றத்​தில் மனுத் தாக்​கல் செய்​துள்​ளார். இந்த மனுவை விசா​ரித்த நீதிபதி அலோக் மெஹ்​ரா, இது குறித்து கோயில் கமிட்டி பதிலளிக்க உத்​தர​விட்​டார்.

தற்​போது இந்த முறை​கேடு வழக்​கு​களை உள்​ளூர் போலீஸ், சிறப்பு புல​னாய்​வுக் குழு, கோயில் கமிட்​டி​யின் துறை ரீதி​யான குழு மற்​றும் கர்​வால் கோட்​ட ஆணை​யர்​ தலை​மையி​லான உயர்மட்​டக்​ குழு விசாரித்து வருகிறது.

கேதார்நாத், பத்​ரி​நாத் கோயில் காணிக்கை திருட்டு வழக்கு
ஆந்​தி​ரா​வில் மீண்​டும் கரோனா பரவு​கிறது: 2 பேர் உயி​ரிழப்பு; 8 பேருக்கு வைரஸ் தொற்று

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in