ஒடிசாவில் ஏழை பெண்களுக்கு ரூ.51,000 திருமண உதவி திட்டம்: மாநில அரசு ஒப்புதல்

ஒடிசாவில் ஏழை பெண்களுக்கு ரூ.51,000 திருமண உதவி திட்டம்: மாநில அரசு ஒப்புதல்
Updated on
1 min read

புவனேஸ்வர்: ஒடி​சா​வில் ஏழை பெண்​களுக்கு திருமண உதவி​யாக ரூ.51,000 வழங்​கும் திட்​டத்தை கொண்​டுவர மாநில பாஜக அரசு அனு​மதி அளித்​துள்​ளது.

ஒடி​சா​வில் கடந்​தாண்டு நடை​பெற்ற சட்​டப்​பேரவை தேர்​தலில், 24 ஆண்டு காலம் ஆட்​சி​யில் இருந்த பிஜு ஜனதா தளம் கட்​சியை தோற்​கடித்து பாஜக முதல் முறை​யாக ஆட்​சியை கைப்​பற்​றியது. அப்​போது ஒரு கோடிக்கு மேற்​பட்ட பெண்​களுக்கு சுபத்ரா திட்​டத்தை கொண்டு வந்​தது. இதன் மூலம் 21 வயது முதல் 60 வயதுக்கு உட்​பட்ட பெண்​களுக்கு 5 ஆண்டு காலத்​துக்கு ரூ.50,000 நிதி​யுதவி வழங்​கப்​பட்​டது. இத்​திட்​டம் பெண்​களை வெகு​வாக கவர்ந்​தது.

அதே​போல் பொருளா​தா​ரத்​தில் பின்​தங்​கி​யுள்ள ஏழை பெண்​களுக்கு முதல்​வரின் திருமண உதவி திட்​டத்​தின் கீழ் ஏழை பெண்​களின் திரு​மணத்​துக்கு ரூ.51 நிதி​யுதவி அளிக்​கப்​படும். இதில் ரூ.35,000 பயனாளி​களின் வங்கி கணக்​கில் நேரடி​யாக செலுத்​தப்​படும். ரூ.10,000 மதிப்​பில் மணமகளுக்​கான பரிசு பொருட்​கள் வழங்​கப்​படும். ரூ.6,000 திரு​மணத்​துக்​கான போக்​கு​வரத்து செல​வுக்கு வழங்​கப்​படும். இத்​திட்​டத்​தின் கீழ் அடுத்த 5 ஆண்​டு​களில் ரூ.60 கோடி செலவு செய்ய மாநில அரசு திட்​ட​மிட்​டுள்​ளது.

ஒடிசாவில் ஏழை பெண்களுக்கு ரூ.51,000 திருமண உதவி திட்டம்: மாநில அரசு ஒப்புதல்
பகவத் கீதை, அசாம் தேயிலை தூள், காஷ்மீர் குங்குமப் பூ: புதினுக்கு பிரதமர் மோடி அளித்த பரிசுகள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in