

புவனேஸ்வர்: ஒடிசாவின் கட்டாக் நகரில் எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது.
இங்கு நேற்று அதிகாலை 3 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் விரைந்து தீயை அணைத்தனர். எனினும் தீ விபத்தில் 10 நோயாளிகள் உயிரிழந்தனர். மேலும் மருத்துவமனை ஊழியர்கள் 11 பேர் காயம் அடைந்தனர்.
இச்சம்பவம் நிகழ்ந்த சிறிது நேரத்திலேயே, ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி, அமைச்சர் முகேஷ் மகாலிங்குடன் மருத்துவமனைக்கு சென்று, நிலைமையை ஆய்வு செய்தார்.