ரயில்வேயில் ஓய்வு பெற்றால் இனி வெள்ளி பதக்கம் இல்லை

ரயில்வேயில் ஓய்வு பெற்றால் இனி வெள்ளி பதக்கம் இல்லை
Updated on
1 min read

புதுடெல்லி: ரயில்வே துறையில் பணியாற்றும் அதிகாரிகள் ஓய்வு பெறும்போது, தங்க முலாம் பூசிய வெள்ளிப் பதக்கம் வழங்கி கவுரவிப்பது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில் ரயில்வே அமைச்சகம், அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் நேற்று அனுப்பிய சுற்றிக்கையில் கூறியிருப்பதாவது: ஓய்வு பெறும் அதிகாரிகளுக்கு தற்போதுள்ள பதக்கம் வழங்கும் நடைமுறை இத்துடன் நிறுத்தப்படுகிறது. ஏற்கெனவே, ரயில்வே அமைச்சகத்தால் கொள்முதல் செய்யப்பட்டிருக்கும் வெள்ளி பதக்கங்கள் பயனுள்ள மற்ற செயல்பாடுகளுக்காக பயன்படுத்தப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெள்ளி விலை மிகவும் அதிகரித்துள்ளதால் செலவினத்தை கட்டுப்படுத்த இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கலாம் என கூறப்படுகிறது.

ரயில்வேயில் ஓய்வு பெற்றால் இனி வெள்ளி பதக்கம் இல்லை
“தவெகவுடன் சேர்ந்தால் காங்கிரசுக்கு ‘பவர்’ கிடைக்கும்” - எஸ்.ஏ.சந்திரசேகர் அழைப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in