என்சிஇஆர்டி புத்தகத்தை சட்டத் துறை உறுப்பினர் சரிபார்க்க வேண்டியது கட்டாயமில்லை: அதிகாரிகள் விளக்கம்

என்சிஇஆர்டி புத்தகத்தை சட்டத் துறை உறுப்பினர் சரிபார்க்க வேண்டியது கட்டாயமில்லை: அதிகாரிகள் விளக்கம்
Updated on
1 min read

புதுடெல்லி: தடை செய்​யப்​பட்ட என்​சிஇஆர்டி 8-ம் வகுப்பு புத்​தகத்தை தயாரித்த குழு​வில் வழக்​கறிஞர் இடம் பெற்​றிருந்​தார், அதை சட்​டத்​துறை உறுப்​பினர்​கள் சரி​பார்க்க வேண்​டும் என்ற கட்​டாய விதி​முறை இல்லை என அதி​காரி​கள் விளக்​கம் அளித்​துள்​ளனர்.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்​றும் பயிற்சி கவுன்​சிலின் (என்​சிஇஆர்​டி) சமூக அறி​வியல் பாடப் புத்​தகத்​தில் ‘நமது சமூகத்​தில் நீதித்​துறை​யின் பங்​கு’ என்ற தலைப்​பிலான பாடம் இடம் பெற்​றிருந்​தது. இதில் நீதித்​துறை பற்றி சர்ச்​சைக்​குரிய கருத்தும் விவரிக்​கப்​பட்​டிருந்​தது.

இது குறித்து உச்​சநீ​தி​மன்​றம் தானாக முன்​வந்து வழக்​குப் பதிவு செய்து விசா​ரித்​தது. நீதித்​துறையை அவம​திக்​கத் திட்​ட​மிட்ட சதி செய்​யப்​பட்​டது போல் தெரி​கிறது என கருத்து தெரி​வித்த உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலை​மையி​லான அமர்​வு, இதற்கு காரண​மானவர்​கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும் என கூறியது.

அப்​போது மத்​திய அரசு சார்​பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா நிபந்​தனையற்ற மன்​னிப்பு கேட்​டார். இதையடுத்து இந்த புத்​தகத்​துக்கு தடை விதிப்​ப​தாக உத்​தர​விட்ட உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் தலை​மையி​லான அமர்​வு, இந்த விவ​காரம் குறித்து மத்​திய கல்​வித்​துறை செய​லா​ளர், என்​சிஇஆர்டி இயக்​குநர் விளக்​கம் அளிக்க உத்​தர​விட்​டது.

இந்​நிலை​யில் 8-ம் வகுப்பு பாடப் புத்​தகத்​தில் சேர்க்​கப்​பட்ட ‘நமது சமூகத்தில் நீதித்​துறை​யின் பங்​கு’ என்ற அத்​தி​யா​யம் புத்​தகம் வெளி​யா​வதற்கு முன்​பாக சட்​டத்​துறை உறுப்​பினர்​களால் ஆய்வு செய்​யப்​பட​வில்லை என்ற விமர்​சனம் எழுந்​துள்​ளது.

இது குறித்து விளக்​கம் அளித்த கல்​வித்​துறை அதி​காரிகள், ‘‘என்​சிஇஆர்டி புத்​தகம் தயாரித்த குழு​வில் வழக்​கறிஞரும் இடம் பெற்​றிருந்​தார். ஆனால் என்​சிஇஆர்டி புத்​தகத்தை சட்டத்​துறை உறுப்​பினர்​கள்​ தனிப்​பட்​ட முறை​யில்​ சரி​பார்க்​க வேண்​டும்​ என்​ற கட்​டாய விதிமுறை எது​வும்​ இல்​லை’’ என்​றனர்​.

என்சிஇஆர்டி புத்தகத்தை சட்டத் துறை உறுப்பினர் சரிபார்க்க வேண்டியது கட்டாயமில்லை: அதிகாரிகள் விளக்கம்
“அபிஷேக் சர்மா தடுப்பாட்டம் ஆடியதை பார்த்து ஆச்சரியமடைந்தேன்” - கவாஸ்கர் பகிர்வு | T20 WC 2026

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in