நொய்டாவில் போராடிய தொழிலாளர் ஊதியம் 21% வரை உயர்வு

நொய்டாவில் போராடிய தொழிலாளர் ஊதியம் 21% வரை உயர்வு
Updated on
2 min read

புதுடெல்லி: நொய்டாவில் தொழிலாளர்களின் வன்முறை போராட்டத்தை தொடர்ந்து, குறைந்தபட்ச ஊதியத்தில் 21% வரை இடைக்கால உயர்வை உ.பி. அரசு அறிவித்துள்ளது. உ.பி.யின் கவுதம புத்தர் நகர் மாவட்டத்தில் உள்ள நொய்டாவில் தொழிற்சாலை ஊழியர்கள் கடந்த சில நாட்களாக ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்தனர்.

அண்டை மாநிலமான ஹரியானாவில் குறைந்தபட்ச ஊதியம் 35% உயர்த்தப்பட்டதை தொடர்ந்து அதுபோன்று உ.பி.யிலும் உயர்த்தக் கோரி இவர் கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் கலவரமாக மாறியது.இதுதொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து உ.பி. அரசு நேற்று வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தொழிலா​ளர்​களுக்​கான குறைந்த​பட்ச ஊதி​யத்​தில் இடைக்​கால உயர்வை அமல்​படுத்த அரசு முடிவு செய்​துள்​ளது.

அடுத்த மாதம் அரசால் அமைக்​கப்​படும் ஊதிய வாரியத்தின் பரிந்​துரைக்கு பிறகு, நிரந்தர குறைந்​த​பட்ச ஊதி​யம் நிர்​ண​யிக்​கப்​படும். ஏப்​ரல் 1 முதல் மாநிலம் முழுவதும் அன்​-ஸ்​கில்டு தொழிலா​ளர்​களின் குறைந்த பட்ச ஊதி​யத்தை 21% வரை அரசு உயர்த்​தி​யுள்​ளது. இந்த உயர்​வு,

நொய்டா மற்​றும் காசி​யா​பாத்​தில் 21% ஆகவும் நகராட்​சி, மாநக​ராட்சி பகு​தி​களில் 15% ஆகவும் மற்ற இடங்​களில் 9% ஆகவும் இருக்​கும். உதா​ரண​மாக, உ.பி.​யில் அன்​-ஸ்​கில்டு தொழிலா​ளர்​கள் தற்​போது மாதத்​திற்கு ரூ.11,313 பெறுகின்றனர். இது நொய்​டா, காசி​யா​பாத்​தில் ரூ.13,690 ஆக உயரும். நகராட்​சி, மாநக​ராட்சி பகு​தி​களில் ரூ.13,006 ஆகவும் மாநிலத்​தின் பிற பகு​தி​களில் ரூ.12,356 ஆகவும் உயரும்.

இதுபோல் நொய்டா மற்றும் காசியாபாத்தில் செமி-ஸ்கில்டு தொழிலாளர்களுக்கு மாத ஊதியம் ரூ.12,445-ல் இருந்து ரூ.15,059 ஆகவும் ஸ்கில்டு தொழிலாளர்களுக்கு ரூ.13,940-ல் இருந்து ரூ.16,669 ஆகவும் உயரும். தொழிலா​ளர்​களுக்கு விதி​களின்​படி மாதாந்​திர ஊதி​யம், கூடு​தல்​நேரப் பணிக்​கான ஊதி​யம், வாராந்​திர விடு​முறை, போனஸ், சமூக பாது​காப்பு உரிமை​கள் மற்​றும் பணி​யிடங்​களில் பெண் தொழிலா​ளர்​களுக்கு பாது​காப்பு ஆகிய​வற்றை தொழில் நிறு​வனங்​கள் உறுதி செய்​திட வேண்​டும்​. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

பேராசை அல்ல: ராகுல் காந்தி

தொழிலாளர்களுக்கு ஆதரவாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: நொய்டாவில் ஒரு தொழிலாளி மாதம் ரூ.12,000 ஊதியம் பெறுகிறார்.

ஆனால் வீட்டு வாடகையாகவே ரூ.4,000 முதல் ரூ.7,000 வரை செலவிடுகிறார். அவருக்கு ஆண்டுக்கு ரூ.300 ஊதிய உயர்வு கிடைக்கும் போது வீட்டு வாடகையை அதன் உரிமையாளர் ரூ.500 உயர்த்தி விடுகிறார். ஊதியத்தில் எவ்வித உயர்வையும் வழங்காமலேயே, தொழிலாளர்களின் வேலை நேரத்தை ஒரு நாளைக்கு 12 மணி நேரமாக மோடி அரசு நீட்டித்துள்ளது.

நொய்டாவைச் சேர்ந்த அந்தத் தொழிலாளி ரூ.20,000 கோருகிறார். இது பேராசை அல்ல — இது அவரது உரிமை; அவரது வாழ்வின் ஒரே அடித்தளம். அரசால் ஒரு சுமையாக சுருக்கப்பட்டுவிட்ட ஒவ்வொரு தொழிலாளிக்கும் நான் துணையாக நிற்பேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நொய்டாவில் போராடிய தொழிலாளர் ஊதியம் 21% வரை உயர்வு
ஈரானின் ‘ஹார்முஸ் ஜலசந்தி மூடல்’ எனும் அமெரிக்க வியூகமும் தாக்கமும் - ஒரு தெளிவுப் பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in