முத்துசுவாமி தீட்சிதரின் 250-வது அவதாரத் திருநாள்: ரூ.250 சிறப்பு நினைவு நாணயத்தை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்

முத்துசுவாமி தீட்சிதரின் 250-வது அவதாரத் திருநாள்: ரூ.250 சிறப்பு நினைவு நாணயத்தை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்
Updated on: 
1 min read

வாராணசி: கர்​நாடக சங்​கீத மும்​மூர்த்​தி​களுள் ஒரு​வ​ரான ஸ்ரீமுத்து சுவாமி தீட்​சிதரின் 250-வது அவ​தா​ரத் திருநாளை முன்னிட்டு, அவரது உரு​வம் பொறித்த ரூ.250 மதிப்​புள்ள சிறப்பு நினைவு நாணயத்தை மத்​திய நிதி அமைச்​சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன்​தினம் வெளி​யிட்​டார்.

உ.பி. மாநிலம் வாராணசி​யில் உள்ள பனாரஸ் இந்து பல்​கலைக்​கழகத்​தின் சார்​பில் ஏற்​பாடு செய்​யப்​பட்​டிருந்த விழா​வில் இந்​தச் சிறப்பு நாணயம் வெளி​யிடப்​பட்​டது. இதில் நிர்​மலா சீதா​ராமன் பேசும்​போது, ‘‘இந்​திய பாரம்​பரிய இசைக்​கும், நம் நாட்​டின் ஆன்மிக பண்​பாட்டு பாரம்​பரியத்​துக்​கும் முத்​துசுவாமி தீட்​சிதர் ஆற்றிய பங்​களிப்பு அளப்​பரியது” என்​றார்.

கர்​நாடக சங்​கீதத்​தின் மும்​மூர்த்​தி​களாக ஸ்ரீதியாக​ராஜர், முத்துசுவாமி தீட்​சிதர் மற்​றும் சியாமா சாஸ்தி​ரி​கள் போற்​றப்​படு​கின்​றனர். பிரதானமாக சம்​ஸ்கிருத மொழி​யில் இயற்​றப்​பட்ட தீட்சிதரின் சாகித்​தி​யங்​கள், பக்தி, இந்​திய தத்​து​வம் மற்​றும் ராக இலக்​கணங்​களின் சரியான கல​வை​யாகத் திகழ்​கின்​றன.

சுமார் 450 முதல் 500 கீர்த்​தனைகளை இவர் இயற்​றியுள்​ளார். வலை​தள விவரங்​களின்​படி  முத்​துசுவாமி தீட்​சிதரின் இந்த ரூ.250 சிறப்பு நினைவு நாணயத்​தின் விலை ரூ.6,985 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 238 நாணயங்​கள் இருப்​பில் உள்​ள தாகவும் தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.

முத்துசுவாமி தீட்சிதரின் 250-வது அவதாரத் திருநாள்: ரூ.250 சிறப்பு நினைவு நாணயத்தை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்
அமெரிக்க இடைக்கால தேர்தலில் ஜனநாயகக் கட்சி அமோக வெற்றி - அதிபர் ட்ரம்ப் கட்சி படுதோல்வி

X