பறக்கும் ரோப் கார், சரக்கு கப்பல் போக்குவரத்து விரிவாக்கம்: வாராணசியில் ரூ.60 ஆயிரம் கோடியில் கட்டமைப்பு மேம்பாடு

மண்டல ஆணையர் சு.​ராஜலிங்கம் தகவல்
சுவிட்சர்லாந்து தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டு வரும் ரோப் கார் திட்டப் பணிகள். (உள்படம்) சு.ராஜலிங்கம்.

சுவிட்சர்லாந்து தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டு வரும் ரோப் கார் திட்டப் பணிகள். (உள்படம்) சு.ராஜலிங்கம்.

Updated on
2 min read

வாராணசி: காசி நகரின் கட்​டமைப்பை மேம்​படுத்த, சாலை​யில் பறக்​கும் ரோப் கார் உட்பட பல்​வேறு திட்​டங்​கள் ரூ.60,000 கோடி​யில் நடை​பெற்று வரு​வ​தாக வாராணசி மண்டல ஆணை​யர் சு.​ராஜலிங்​கம் தெரி​வித்​தார்.

ஆன்​மிகத்​தின் தலைநகர​மான காசி, தற்​போது நவீன கட்​டமைப்​பு​களு​டன் பிரம்​மாண்​ட​மான வளர்ச்​சியை நோக்கி பயணித்து வரு​கிறது. குறுகிய சந்​துகளும், நெரிசலான சாலைகளும் மட்​டுமே காசி​யின் அடை​யாள​மாக இருந்த நிலை மாறி, இன்று சர்​வ​தேச தரத்​திலான சாலைகள், பாலங்​கள், நதிவழிக் கப்​பல் போக்கு​வரத்து என பெரும் மாற்​றத்தை வாராணசி கண்​டுள்​ளது. நகரின் போக்​கு​வரத்து நெரிசலைக் குறைக்​க​வும், பொருளா​தா​ரத்தை மேம்​படுத்​த​வும் சுமார் ரூ.60,000 கோடி மதிப்​பிலான திட்​டங்​கள் முன்​னெடுக்​கப்​பட்​டுள்​ளன.

இதுகுறித்து வாராணசி மண்டல ஆணை​யரும், தமிழரு​மான சு.​ராஜலிங்​கம் நம்மிடம் கூறிய​தாவது: பிரதமர் நரேந்​திர மோடி​யின் அறி​வுறுத்​தலின்​படி காசி நகரத்​தில் அதன் பழமை மாறாமல் உட்​கட்​டமைப்பை மேம்​படுத்த திட்​ட​மிட்​டோம். இதற்​காக ரூ.60 ஆயிரம் கோடி​யில் ஒரு விரி​வான போக்​கு​வரத்​துத் திட்​டம் வகுக்​கப்​பட்​டது. இதில் ரூ.40 ஆயிரம் கோடி மதிப்​பிலான பணி​கள் ஏற்​கெனவே முடிக்​கப்​பட்டு மக்​கள் பயன்​பாட்​டுக்கு வந்​து​விட்​டன.

இங்கு முன்பு வெளிவட்​டச் சாலைகள் (ரிங் ரோடு) இல்​லாத​தால் அதி​கபட்​சம் 7 மணி நேரம் வரை போக்​கு​வரத்து நெரிசல் இருந்​தது. குறிப்​பாக விமான நிலை​யத்​தில் இருந்து நகருக்​குள் வர 3 மணி நேர​மாகும். ஆனால், தற்​போது புதிய ‘ரிங் ரோடு’ மற்​றும் கங்கை நதி​யின் குறுக்கே கட்​டப்​பட்​டுள்ள பாலங்​கள் காரண​மாக பயண நேரம் 40 நிமிடங்​களாகக் குறைந்​துள்​ளன.

நகரைச் சுற்​றி​லும் 6 வழிச்​சாலை​யாக ‘ரிங் ரோடு’ அமைக்​கப்​பட்​டுள்​ளது. அங்​கிருந்து நகருக்​குள் வரும் அனைத்​துச் சாலைகளும் 4 வழிச்​சாலைகளாக மாற்​றப்​பட்டு வரு​கின்​றன. அதே​போல், வாராணசி​யில் இருந்து தற்​போது 7 வந்தே பாரத் ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன. ஒரு நாளைக்கு 1 லட்​சம் பயணி​களை கையாளும் விதமாக ரயில் நிலை​யங்​கள் மேம்​படுத்​தப்​பட்​டுள்​ளன. அதே​போல், முன்பு ஒரு நாளைக்கு 10 விமானங்​கள் மட்​டுமே வந்து சென்ற வாராணசி விமான நிலை​யத்​தில், தற்​போது 52 விமானங்​கள் இயக்​கப்​படு​கின்​றன.

சரக்கு கப்​பல் போக்​கு​வரத்து: கங்கை நதியை வெறும் வழி​பாட்​டுக்கு மட்​டுமின்​றி, பொருளா​தார வளர்ச்​சிக்​கும் பயன்​படுத்த திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. ராமநகரில் உள்​நாட்டு நீர்​வழிப் போக்​கு​வரத்​துக்​காக ஒரு சிறிய துறை​முகம் அமைக்​கப்​பட்​டுள்​ளது. இங்​கிருந்து கொல்​கத்தா (ஹல்​தி​யா) வரை சரக்​கு​களைக் கொண்​டு​செல்ல முடி​யும் கோடை​காலத்​தில் நதி​யில் நீர் குறை​யும்​ போது கப்​பல் போக்​கு​வரத்​தில் சிக்​கல் வரா​திருக்க, நதி​யைத் தூர்​வாரும் பணி​கள் நடை​பெற்றுவரு​கின்​றன.

இது முழு​மையடைந்​தால் ஆண்டு முழு​வதும் சரக்கு மற்​றும் சுற்​றுலாப் பயணி​களுக்​கான கப்​பல்​களை இயக்க முடி​யும். மேலும், வெளி​நாட்​டுச் சுற்​றுலாப் பயணி​களை ஈர்க்​கும் வகை​யில் சொகுசு கப்​பல் போக்​கு​வரத்​தும் அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது.

ரோப் கார்: வாராணசி​யில் மெட்ரோ ரயில் இயக்க சாத்​தி​யக்​கூறுகள் இல்​லாத​தால் தற்​போது ரூ.800 கோடி​யில் ‘ரோப் கார்’ திட்​டம் கொண்டு வரப்​பட்​டுள்​ளது. பொது​வாக ரோப் கார் சுற்​றுலா தலங்​களில் மட்​டுமே பயன்​படுத்​தப்​படும். ஆனால், இந்​தி​யா​விலேயே முதல்​முறை​யாக பொதுப்போக்​கு​வரத்​துக்​காக காசி​யில் ரோப் கார் செயல்​படுத்​தப்​படு​கிறது. வாராணசி ரயில் நிலை​யத்​தில் இருந்து காசி விஸ்​வ​நாதர் கோயில் (கோ​தோலி​யா) வரை சுமார் 4 கி.மீ தூரத்​துக்கு இது அமைக்​கப்​பட்டு வரு​கிறது.

தற்​போது ரயில் நிலை​யத்​திலிருந்து கோயிலுக்கு செல்ல சாலை வழி​யில் 1 மணி நேர​மாகிறது. ரோப் காரில் 15 நிமிடங்​களில் சென்​றடைய​லாம். ஐரோப்​பிய பாது​காப்பு தரத்​துடன் சுவிட்​சர்​லாந்து தொழில்​நுட்​பத்​தில் இது உரு​வாக்​கப்​படு​கிறது. அடுத்​தாண்டு மே மாதத்​துக்​குள் இது பயன்​பாட்​டுக்கு வரும். இதற்கு கட்​ட​ண​மாக ரூ.50 முதல் 100 வரை நிர்​ண​யிக்க பரிசீலித்து வரு​கிறோம்.

உச்​சம் தொடும் பொருளா​தா​ரம்: இத்​தகைய மேம்​பாட்​டுத் திட்​டங்​களால் நகரின் பொருளா​தா​ரம் அசுர வளர்ச்சி அடைந்​துள்​ளது. முன்பு ஒரு நாளைக்கு 5,000 பேர் மட்​டுமே கோயிலுக்கு வந்​தனர். இப்​போது சாதாரண நாட்​களில்​கூட சராசரி​யாக 1.5 முதல் 2 லட்​சம் பக்​தர்​கள் வரு​கின்​றனர். ஒரு பக்​தர் சராசரி​யாக ரூ.5,000 செலவு செய்​கிறார் என்​றால்​கூட, அது உள்​ளூர் பொருளா​தா​ரத்​தில் பெரிய தாக்​கத்தை ஏற்​படுத்​துகிறது.

உணவகத் தொழில், கைவினைப் பொருட்​கள், ஜவுளி மற்​றும் சிறு வணி​கம் மிகப்​பெரிய வளர்ச்​சி​யைக் கண்​டுள்​ளன. அதே​போல், அருகே உள்ள மாவட்​டங்​களில்​ இருந்​து வேலை​வாய்ப்​புக்​காக இங்​கு வருபவர்​களின்​ எண்​ணிக்​கை​யும்​ உயர்ந்​துள்​ளது. இவ்​வாறு கூறி​னார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in