தெலங்​கானா: சாலை தடுப்பில் கார் மோதி நரம்பியல் நிபுணர் உயிரிழப்பு

தெலங்​கானா: சாலை தடுப்பில் கார் மோதி நரம்பியல் நிபுணர் உயிரிழப்பு
Updated on
1 min read

ஹைதராபாத்: தெலங்​கானா மாநிலம் கம்​மம் நகரைச் சேர்ந்த நரம்​பியல் அறு​வைச் சிகிச்சை நிபுணர் டாக்​டர் ஜெகதீஷ் பாபு, நேற்று காலை ஹைதராபாத்துக்​குத் தனி​யாக காரில் சென்று கொண்​டிருந்​தார்.

அவர் பயணம் செய்த கார், காலை சுமார் 7.15 மணி​யள​வில் சூரியாபேட்டை மாவட்​டம் பிள்​ளலமர்ரி அருகே உள்ள தேசிய நெடுஞ்​சாலை​யில் சென்​று​கொண்​டிருந்​தது. அப்​போது, திடீரென கட்​டுப்​பாட்டை இழந்த கார் சாலை​யின் நடு​விலிருந்த தடுப்​பில் மோதி​யது. அடுத்த சில நிமிடங்​களில் காரில் தீப்பற்றி கொழுந்​து​விட்டு எரிந்​தது. இதனால் ஓட்​டுநர் இருக்​கை​யில் இருந்த ஜெகதீஷ் பாபு​வால் காரிலிருந்து வெளி​யேற முடிய​வில்​லை.

தகவல் அறிந்து தீயணைப்​புப் படை​யினர் மற்​றும் போலீ​ஸார் சம்பவ இடத்​துக்கு வந்து தீயை அணைத்​தனர். ஆனாலும், கார் முற்​றி​லும் எரிந்து நாச​மானது. ஓட்​டுநர் இருக்​கை​யில் இருந்து கருகிய நிலை​யில் ஜெகதீஷ் பாபு உடல் மீட்​கப்​பட்​டது.

போதிய தூக்கமின்மை காரணமாக ஜெகதீஷ் பாபு வாகனம் கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும், கார் தீப்பிடித்ததற்கான துல்லிய மான காரணம் மற்றும் விபத்துக்கான காரணம் குறித்து விசா ரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

தெலங்​கானா: சாலை தடுப்பில் கார் மோதி நரம்பியல் நிபுணர் உயிரிழப்பு
டாஸ்மாக் ஊழியர்களுக்குப் புதிய சீருடை; பண்டிகைக்கு ரூ.20,000 முன்பணம்: தமிழக அரசு அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in