அண்டை நாடு​கள் நேரடி​யாக நிலக்​கரி வாங்​க அனுமதி

அண்டை நாடு​கள் நேரடி​யாக நிலக்​கரி வாங்​க அனுமதி
Updated on
1 min read

புதுடெல்லி: அண்டை நாடு​களின் நிறு​வனங்​கள் இனி இந்​திய இடைத்​தரகர்​களை தவிர்த்​து, நேரடி​யாக ஆன்​லைன் நிலக்​கரி ஏலங்​களில் பங்​கேற்​கலாம் என்று அரசுக்கு சொந்​த​மான கோல் இந்​தியா நிறு​வனம் (சிஐஎல்) அறி​வித்​துள்​ளது.

இதுகுறித்து சிஐஎல் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “இந்​தி​யா​வில் இருந்து நிலக்​கரி இறக்​குமதி செய்ய விரும்​பும் வங்​கதேசம், பூடான், நேபாளம் போன்ற அண்டை நாடு​களின் நிறு​வனங்​கள் இனி நேரடி​யாக சிஐஎல் நடத்​தும் ஒன்றை சாளர முறை (எஸ்​டபிள்​யுஎம்ஏ) ஏலங்​களில் பங்​கேற்​கலாம். இந்த நடை​முறை 2026 ஜனவரி 1 முதல் செயல்​பாட்​டுக்கு வரு​கிறது.

உபரி நிலக்​கரி வளங்​களை சிறப்​பாகப் பயன்​படுத்​த​வும், வெளிப்​படைத்​தன்​மையை மேம்​படுத்​த​வும் இந்த நடவடிக்கை உதவும். அந்​நியச் செலா​வணி மேலாண்​மைச் சட்ட (ஃபெ​மா) விதி​களின்​படி கட்டண நடை​முறை வெளிப்​படை​யாக இருக்​கும்’’ என கூறியுள்ளது.

அண்டை நாடு​கள் நேரடி​யாக நிலக்​கரி வாங்​க அனுமதி
பெண்களின் ஆபாச Grok ஏஐ படங்களை நீக்க எக்ஸ் தளத்துக்கு மத்திய அரசு கெடு!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in