

புதுடெல்லி: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) மூத்த தலைவர்கள், கட்சித் தலைவரும் துணை முதல்வருமான சுனேத்ரா பவாருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.
அவர்கள், மத்திய அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினர் மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் சுனேத்ராவிடம் கலால், விளையாட்டு, இளைஞர் நலன் ஆகிய துறைகள் உள்ளன. தனது கணவர் அஜித் பவார் வகித்த நிதித் துறையை வழங்கக் கோரி முதல்வர் தேவேந்திர பட்னாவிஸிடம் அவர் வலியுறுத்தி வருகிறார்.
மேலும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் தனது மகன் பார்த் பவாரை நியமிக்கவும் அவர் காய்களை நகர்த்தி வருகிறார். இதற்கு கட்சியின் மூத்த தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து உள்ளனர். பகிரங்கமாக போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.
இந்த சூழலில் தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) மூத்த தலைவர்கள் பிரபுல் படேல், சுனில் தாட்கெரே, தனஞ்செய் முண்டே் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது சுனேத்ரா பவார், அவரது மகன் பார்த் பவா்ர் விவகாரம் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.