

பிரதிநித்துவப் படம்
புதுடெல்லி: உடல் உறுப்பு தானம் தொடர்பாக தேசிய அளவில் கொள்கையை உருவாக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வலியுறுத்தி, உறுப்பு தானத்துக்கான இந்தியன் சொஸைட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இம்மனுவை தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதி வினோத் சந்திரன் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. மனுதாரர்தரப்பு வாதங்களை கேட்டறிந்த உச்ச நீதிமன்றம், மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து, உறுப்புதானத்தை முறைப்படுத்த தேசியளவில் கொள்கை வகுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தர விட்டுள்ளது.