

நீடா கான்
நாசிக்: மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரில் உள்ள டிசிஎஸ் அலுவலகத்தில் நடைபெற்ற பாலியல் தொல்லை, மதம் மாற கட்டாயப்படுத்துதல் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதில் டிசிஎஸ் நிறுவனத்தில் ஆபரேஷன்ஸ் மேனேஜராக வேலை பார்த்த நீடா கான் மட்டும் தலைமறைவாக உள்ளார்.
இந்நிலையில், 2 மாத கர்ப்பிணியாக இருப்பதால், தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரி கடந்த சனிக்கிழமை நாசிக்கிலுள்ள நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த கூடுதல் அமர்வு நீதிபதி கே.ஜி.ஜோஷி, நீடா கானுக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டார். இந்த வழக்கில் போலீஸ் தரப்பினரும், புகார்தாரரும் வரும் ஏப்.27ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து தலைமறைவாக உள்ள நீடா கானை கைது செய்ய போலீஸார் தேடி வருகின்றனர்.