விமானப்​ படை​ துணைத் தளபதியாக நாகேஷ் பொறுப்பேற்பு

விமானப்​ படை​ துணைத் தளபதியாக நாகேஷ் பொறுப்பேற்பு
Updated on
1 min read

புதுடெல்லி: விமானப்​படை துணைத் தளப​தி​யாக இருந்த ஏர் மார்​ஷல் நம்​தேஸ்​வர் திவாரி நேற்று முன்​தினம் ஓய்வு பெற்​றார். இதையடுத்து தென்​மேற்கு மண்டல தலைமை அதி​காரி​யாக பணி​யாற்​றிய ஏர் மார்​ஷல் நாகேஷ் கபூர் விமானப்​படை துணைத் தளப​தி​யாக நியமிக்​கப்​பட்​டார்.

இவர் டெல்​லி​யில் உள்ள வாயு பவனில் நேற்று பொறுப்​பேற்​றுக் கொண்​டார். அவருக்கு விமானப்​படை வீரர்​கள் அணிவகுப்பு மரி​யாதை செலுத்​தினர். விமானப்​படை​யில் கடந்த 1986-ம் ஆண்டு சேர்ந்த நாகேஷ் கபூர், பலவித போர் விமானங்​களை இயக்​கிய அனுபவம் பெற்​றவர் என்பது குறிப்​பிடத்​தக்​கது.

விமானப்​ படை​ துணைத் தளபதியாக நாகேஷ் பொறுப்பேற்பு
பிஎஸ்என்எல் சார்பில் வாய்ஸ் ஓவர் வைஃபை சேவை அறிமுகம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in