

கோப்புப்படம்
கொச்சி: கேரள மாநிலம் கொச்சி மாவட்டம் முனம்பம் பகுதியில் உள்ள 404 ஏக்கர் நிலத்தை வக்பு வாரியம் சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த நிலத்தில் 600 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்நிலையில் இந்தக் குடும்பங்களிடமிருந்து சொத்து வரியை வசூலிக்காமல் அரசு அதிகாரிகள் நிறுத்தி வைத்தனர். அது பிரச்சினைக்குரிய நிலம் என்பதால் வரியை வசூலிக்கவில்லை என்று அவர்கள் தெரிவித்து வந்தனர். இதனால் அந்தப் பகுதியில் வசித்து வந்தவர்கள் முனம்பம் நில பாதுகாப்புக் கவுன்சில் என்ற பெயரில் ஓர் அமைப்பை ஏற்படுத்தி தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்தனர். மேலும், நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர்.
இந்நிலையில் அந்த குடும்பங்களிடமிருந்து நிலவரியை வசூலிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேரள மாநில அரசுக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இன்று போராட்டத்தை நிறுத்தப் போவதாக போராட்டக்குழு உறுப்பினர் ஜோசப் ராக்கி அறிவித்துள்ளார்.