கூட்டு திருமணத்தில் கலந்து கொண்டு மணம் முடித்த ம.பி. முதல்வரின் மகன்

கூட்டு திருமணத்தில் கலந்து கொண்டு மணம் முடித்த ம.பி. முதல்வரின் மகன்
Updated on
1 min read

போபால்: மத்​தி​ய பிரதேச முதல்​வர் மோகன் யாதவ் தனது இளைய மகன் டாக்​டர் அபிமன்யு யாதவுக்​கு, உஜ்ஜைன் நகரில் நடத்​தப்​பட்ட கூட்டு திரு​மணத்​தில் மிக எளிமை​யாக மணம் முடித்து வைத்​தார்.

உஜ்ஜைன் நகரில் சன்​வாரா கேதி என்ற இடத்​தில் கிஷிப்ரா ஆற்​றங்​கரை​யில் 21 ஏழை ஜோடிகளுக்கு நேற்று திரு​மணம் நடை​பெற்​றது. அவர்​களோடு இணைந்து ம.பி. முதல்​வரின் மகன் டாக்​டர் அபிமன்யு யாதவ், டாக்​டர் இஷிதா படேலை மணந்​தார்.

ம.பி முதல்​வர் மோகன் யாதவ் தனது மகன் அபிமன்யு யாதவுக்கு எளிமை​யான முறை​யில் திரு​மணம் நடத்​தி​யது பலரை கவர்ந்​துள்​ளது.

முதல்​வர் வீட்டு திருமண அழைப்​பிதழும் சமூக ஊடகத்​தில் வைரலாக பரவியது. 21 ஜோடிகளு​டன் நடை​பெறும் கூட்டு திரு​மணத்​தில், தனது மகன் திரு​மணம் நடை​பெறவுள்​ள​தாக​வும், இதில் பங்​கேற்​போர் புதுமண தம்​ப​தி​களுக்கு பரிசு பொருட்​களை வழங்க வேண்​டாம் எனவும், ஆசிகளை மட்​டும் வழங்​கும்​படி​யும் முதல்​வர் மோகன் யாதவ் வேண்​டு​கோள் விடுத்​திருந்​தார். கூட்டு திரு​மணத்​தில் மணம் முடித்த ஜோடிகள் அனை​வரது பெயரும் முதல்​வர் வீட்டு திருமண பத்​திரி​கை​யில் இடம் பெற்​றிருந்​தது.

இதுகுறித்து அபிமன்யு யாதவ் கூறுகை​யில், ‘‘கூட்டு திரு​மணத்​தில் பங்​கேற்று மணம் முடித்​தது இரட்​டிப்பு மகிழ்ச்​சி. எனது திருமண வாழ்க்​கை மகிழ்ச்​சி​யாக இருக்​கும்​ என நம்​புகிறேன்​’’ என்​றார்​.

கூட்டு திருமணத்தில் கலந்து கொண்டு மணம் முடித்த ம.பி. முதல்வரின் மகன்
‘கொலை செய்யப்பட்டதால் எங்கள் காதல் அழியாது’ - உயிரிழந்த காதலன் உடலுடன் திருமணம் செய்து கொண்ட காதலி சபதம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in