புனித அயோத்தி நகரில் முஸ்லிம்கள் நுழைய தடை விதிக்க துறவிகள் கோரிக்கை

ராமர் கோயிலில் இளைஞர் தொழுகை நடத்த முயன்ற விவகாரம்
புனித அயோத்தி நகரில் முஸ்லிம்கள் நுழைய தடை விதிக்க துறவிகள் கோரிக்கை
Updated on
1 min read

புதுடெல்லி: உத்தர பிரதேசத்​தின் அயோத்தி யில் உள்ள ராமர் கோயிலைக் காண முஸ்​லிம்​களும் அனு​ம​திக்​கப்​படு​கின்​றனர். ஆனால் கரு​வறை​யில் நுழைய மட்​டும் அனு​ம​திப்​ப​தில்​லை.

இச்​சூழலில், ராமர் கோயி​லில் கடந்த வாரம் வந்த ஒரு முஸ்​லிம் இளைஞர், சால்வை விரித்து தொழுகை நடத்த முயற்​சித்​தார். உடனடி​யாக இதைப் பார்த்த பாது​காப்பு போலீ​ஸார் அந்த இளைஞரை தடுத்து நிறுத்​தினர்.

போலீ​ஸாரின் விசா​ரணைக்கு பிறகு அவர் எச்​சரிக்​கப்​பட்டு விடுவிக்​கப்​பட்​டார். இந்த சம்​பவம் அயோத்​தி​யைச் சேர்ந்த துறவி​கள் மத்​தி​யில் கடும் கொந்தளிப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. முஸ்​லிம்​கள் அயோத்​தி​யில் நுழையத் தடை விதிக்க வேண்​டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.

இது குறித்து அயோத்​தி​யின் துறவி​கள் சங்​கம் அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்​தில், “ராம ஜென்​மபூமி கோயில் கோடிக்கணக்​கான பக்​தர்​களின் நம்​பிக்​கை​யின் ஆதா​ர​மாக உள்ளது. அங்கு மத உணர்​வு​களைப் புண்​படுத்​தும் எந்​தச் செயலை​யும் சகித்​துக்​கொள்ள முடி​யாது.

சூழலைக் கெடுப்​ப​தற்​கும் சமூக நல்​லிணக்​கத்​திற்​குப் பங்​கம் விளை​விப்​ப​தற்​கும் திட்​ட​மிட்டு முயற்​சிகள் மேற்கொள்ளப்படுகின்​றன. எதிர்​காலத்​தில் இது​போன்ற சம்பவங்களைத் தடுக்க, கோயில் வளாகத்​தில் பாது​காப்பு மற்​றும் கண்​காணிப்பை வலுப்​படுத்த வேண்​டும். முஸ்​லிம் சமூக உறுப்பினர்​களுக்கு அயோத்​தி​யில் தடை விதிக்க வேண்​டும்” எனக் குறிப்​பிடப்​பட்​டுள்​ளது.

அயோத்​தி​யின் ஹனு​மன்​ கோயி​லின் மடா​திப​தி​யான ராஜு தாஸ் கூறுகை​யில், ‘ராம ஜென்​மபூமி கோயி​லில் ஒரு முஸ்​லிம் தொழுகை நடத்​திய சம்​பவம் கண்​டிக்​கத்​தக்​கது. இந்​துக்​கள் மதவெறியர்​களாக இருந்​திருந்​தால், ராம

ஜென்​மபூமி கோயி​லில் தொழுகை நடத்​தி​ய​வர் உயிர்பிழைத்திருக்க மாட்​டார். எனவே, குற்​றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமை​யான நடவடிக்கை எடுக்க வேண்டும். அயோத்​திக்​குள் முஸ்​லிம்​கள் நுழைவதற்​குத் தடை விதிக்க வேண்​டும்’ என்​றார்.

புனித அயோத்தி நகரில் முஸ்லிம்கள் நுழைய தடை விதிக்க துறவிகள் கோரிக்கை
“தமிழர்களை அவமானப்படுத்துவதா?” - ராஜ் தாக்கரேக்கு அண்ணாமலை சவால்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in