இத்தாலியின் நீண்ட கால பிரதமர் மெலோனிக்கு மோடி வாழ்த்து

இத்தாலியின் நீண்ட கால பிரதமர் மெலோனிக்கு மோடி வாழ்த்து
Updated on
1 min read

புதுடெல்லி: இத்தாலியில் மிக நீண்ட காலம் பிரதம​ராக பதவி வகிக்​கும் ஜார்ஜியா மெலோனிக்கு பிரதமர் நரேந்​திர மோடி வாழ்த்து தெரி​வித்​துள்​ளார்.

ஐரோப்​பிய நாடான இத்​தாலி கடந்த 1946-ம் ஆண்​டில் குடியர​சாக மாறியது. இதன்​பிறகு கடந்த 80 ஆண்​டு​களில் அங்கு 68 அரசுகள் ஆட்சி நடத்தி உள்​ளன. கடந்த 2001 ஜூன் 11-ம் தேதி முதல் 2005-ம் ஆண்டு ஏப்​ரல் 23-ம் தேதி வரை இத்​தாலி​யின் பிரதம​ராக சில்​வியோ பெர்​லுஸ்​கோனி பதவி வகித்​தார். அவர் 1,412 நாட்​கள் அந்த நாட்​டின் பிரதம​ராக நீடித்​தார்.

அவரே இத்​தாலி​யின் நீண்ட கால பிரதமர் என்ற பெரு​மை​யைப் பெற்​றிருந்​தார். கடந்த 2022-ம் ஆண்டு அக்​டோபர் 22-ம் தேதி இத்​தாலி​யின் பிரதம​ராக ஜார்​ஜியா மெலோனி பதவி​யேற்​றார். அவர் நேற்று 1,413 நாட்​களைக் கடந்து முன்​னாள் பிரதமர் பெர்​லுஸ்​கோனி​யின் சாதனையை முறியடித்​தார்.

இதுதொடர்​பாக பிரதமர் நரேந்​திர மோடி சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: இத்​தாலி​யின் நீண்ட கால பிரதமர் என்ற பெரு​மை​யைப் பெற்​றிருக்​கும் எனது நண்​பர் மெலோனியை மனதார வாழ்த்​துகிறேன். அவரது தலைமை மீது இத்​தாலி மக்​கள் மிகுந்த நம்​பிக்கை வைத்துள்ளனர். இதன்​காரண​மாகவே அவர் மிக நீண்ட காலம் பிரதம​ராக நீடிக்​கிறார்.

இரு நாடு​களைச் சேர்ந்த மக்​களின் நன்​மைக்​காக இந்த உறவு மேலும் வலுப்​படுத்​தப்​படும். இவ்​வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்​ளார்​. பிரதமர் மெலோனி வெளியிட்ட பதிவில், “பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. ஐஎம்இசி வர்த்தக வழித்தட திட்டத்தை நிறைவேற்ற இத்தாலியும் இந்தியாவும் இணைந்து செயல்படும்” என்று தெரிவித்துள்ளார்.

இத்தாலியின் நீண்ட கால பிரதமர் மெலோனிக்கு மோடி வாழ்த்து
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி எப்-17 ராக்கெட் வெற்றி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in