பிப்.4-ல் மக்களவையில் நடந்தது என்ன? - வீடியோ வெளியிட்டார் மத்திய அமைச்சர் ரிஜிஜு

பிப்.4-ல் மக்களவையில் நடந்தது என்ன? - வீடியோ வெளியிட்டார் மத்திய அமைச்சர் ரிஜிஜு
Updated on
1 min read

புதுடெல்லி: மக்​களவை​யில் பிப்​ர​வரி 4-ம் தேதி நடந்​தது என்ன என்​பது தொடர்​பான வீடியோவை மத்​திய நாடாளு​மன்ற விவகாரத்​ துறை அமைச்​சர் கிரண் ரிஜிஜு நேற்று வெளி​யிட்​டார்.

நாடாளு​மன்ற பட்​ஜெட் கூட்​டத்​தொடர் கடந்த ஜனவரி 28ம் தேதி தொடங்கி நடை​பெற்று வரு​கிறது. சீன ஆக்​கிரமிப்பு குறித்த முன்னாள் ராணுவத் தளபதி நரவனேவின் புத்​தகத்​தில் இடம்பெற்றுள்ள தகவல்​களைக் குறிப்​பிட்டு காங்​கிரஸ் மூத்த தலைவரும், மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான ராகுல் காந்தி உள்​ளிட்ட எதிர்க்​கட்​சி​யினர் நாடாளு​மன்​றத்​தில் கேள்வி எழுப்பி தொடர்ந்து அமளி​யில் ஈடு​பட்டு வந்​தனர்.

இந்​நிலை​யில், பிப்​ர​வரி 1-ம் தேதி பட்​ஜெட் தாக்​கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து குடியரசுத்​தலை​வர் உரைக்கு நன்றி தெரிவிக்​கும் தீர்​மானம் மீது விவாதம் நடை​பெற்​றது. பிப்ரவரி 4ம் தேதி அன்று மக்​களவை​யில் இந்த தீர்​மானத்​துக்கு பிரதமர் மோடி நன்றி தெரி​வித்து உரை​யாற்​று​வார் என்று கூறப்பட்​டிருந்​தது. ஆனால் பிரதமர் மோடி அன்று அவைக்கு வரவில்​லை.

இந்​நிலை​யில், பிரதமர் மோடியை நான்​தான் வர வேண்​டாம் என்று கூறினேன், அவருக்கு எதி​ராக எதிர்க்​கட்சி பெண் எம்.பி.க்கள் சதி செய்​யத் திட்​ட​மிட்​டிருந்​தனர் என்று மக்​கள​வைத் தலை​வர் ஓம் பிர்லா கூறியது சர்ச்​சையை எழுப்​பியது.

பிரதமர் மோடி அன்று மக்​களவைக்கு வராதது குறித்து இரு தரப்பு எம்.பி.க்​களும் விவா​தித்து வரும் நிலை​யில் நாடாளு​மன்ற விவ​காரங்​கள் துறை அமைச்​சர் கிரண் ரிஜிஜு, பிப்​ர​வரி 4-ம் தேதியன்று எதிர்க்​கட்சி பெண் எம்.பி.க்​கள் மக்​களவை​யில் ஆர்ப்பாட்​டம் செய்த வீடியோ ஒன்றை நேற்று வெளி​யிட்​டுள்​ளார்.

அதில் பிரதமர் இருக்​கைக்கு அருகே காங்​கிரஸ் எம்.பி.க்​கள் ஜோதி​மணி, சுதா மற்​றும் எதிர்க்​கட்​சி​யைச் சேர்ந்த பெண் எம்.பி.க்​கள் ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​படும் காட்சி உள்​ளது. பின்​னர் பாஜக எம்.பி.க்​களு​டன் வாக்​கு​வாதம் செய்​வது போன்ற காட்சிகளும் அந்த வீடியோ​வில் இடம்​பெற்​றுள்​ளன. மத்​திய அமைச்​சர் கிரண் ரிஜிஜு தனது எக்ஸ் பக்​கத்​தில் இந்த வீடியோவை வெளி​யிட்டு “காங்​கிரஸ் கட்​சி, தங்​கள் எம்.பி.க்களின் மிக​வும் இழி​வான நடத்​தையைப் பற்றி பெருமை கொள்​கிறது.

நாடாளுமன்ற அவையில் பாஜக பெண் எம்பிக்கள் தடுத்து நிறுத்தாமல் இருந்திருந்தால், காங்கிரஸ் பெண் எம்பிக்களால் ஒரு மோசமான சம்பவம் அங்கு அரங்கேறி இருக்கும். நாடாளுமன்றத்​தின் கண்​ணி​யத்​தை​யும் புனிதத்​தை​யும் பாதுகாப்​ப​தில் நாங்​கள் மிகுந்த அக்​கறை கொண்​டுள்​ளோம்​” என்று பதி​விட்​டுள்​ளார்​.

பிப்.4-ல் மக்களவையில் நடந்தது என்ன? - வீடியோ வெளியிட்டார் மத்திய அமைச்சர் ரிஜிஜு
‘இது ஒன்​றும் தியேட்​டர் கிடையாது’ - ரசிகர்​களிடம் அஜித் கோபம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in