ராணுவ மோதல்கள் பிரச்சினைக்குத் தீர்வாகாது: பிரதமர் மோடி கருத்து

ராணுவ மோதல்கள் பிரச்சினைக்குத் தீர்வாகாது: பிரதமர் மோடி கருத்து
Updated on
1 min read

புதுடெல்லி: ஆஸ்​திரியா பிரதமர் கிறிஸ்​டியன் ஸ்டாக்​கர் 4 நாள் அரசு முறை பயண​மாக கடந்த 14-ம் தேதி இந்​தியா வந்​தார். அவர் டெல்​லி​யில் பிரதமர் நரேந்​திர மோடியை நேற்று சந்​தித்​துப் பேசி​னார்.

அப்​போது பல்​வேறு துறை​களில் இருதரப்பு உறவை பலப்படுத்​து​வது குறித்து இரு தலை​வர்​களும் விரி​வாக ஆலோ​சனை நடத்​தினர். இந்த பேச்​சு​வார்த்​தைக்​குப் பிறகு பிரதமர் நரேந்​திர மோடி கூறிய​தாவது: இன்று உலக நாடு​கள் அனைத்​தும் மிக​வும் தீவிர​மான மற்​றும் பதற்றமான சூழலைக் கடந்து கொண்​டிருக்​கின்​றன.

ராணுவ மோதல்​களால் பிரச்​சினை​களுக்கு தீர்வு காண முடி​யாது என்​பதை இந்​தி​யா​வும் ஆஸ்​திரி​யா​வும் ஒப்புக்கொள்​கிறது. உக்​ரைன் மற்​றும் மேற்கு ஆசி​யா​வில் நிலையான, நீடித்த மற்​றும் உறு​தி​யான அமைதி ஏற்பட வேண்​டும் என வலி​யுறுத்​துகிறோம். மேலும், இந்​தி​யா-ஐரோப்​பிய யூனியன் இடையே வரலாற்​றுச் சிறப்​புமிக்க சுதந்​திர வர்த்தக ஒப்​பந்​தம் ஏற்​பட்​டதைத் தொடர்ந்​து, இருதரப்பு உறவில் ஒரு புதிய பொற்​காலம் தொடங்கி உள்ளது. இவ்வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

ராணுவ மோதல்கள் பிரச்சினைக்குத் தீர்வாகாது: பிரதமர் மோடி கருத்து
கோவை வடக்கு தொகுதியில் வாகை சூடப்போவது யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in