லேசான நிலநடுக்கம் - பெங்களூரு மக்கள் பீதி

லேசான நிலநடுக்கம் - பெங்களூரு மக்கள் பீதி
Updated on: 
1 min read

பெங்களூரு: பெங்களூரு புறநகர் பகுதி​யில் நேற்று லேசான நிலநடுக்கம் ஏற்​பட்​ட​தால் மக்​கள் அச்​சமடைந்து, வீடுகளை விட்டு வெளியேறினர்.

பெங்​களூரு புறநகர் மாவட்​டத்​தில் உள்ள திம்​மோஜனஹள்ளியில் நேற்று காலை​யில் திடீரென நிலநடுக்​கம் ஏற்​பட்​டது. இதனால் வீடுகளில் இருந்த பாத்​திரங்​கள் கீழே விழுந்​தன.

அச்​சத்​தின் காரணமாக மக்​கள் அலறியடித்​துக்​கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர். பொது​வெளி​யிலும் மைதானத்​திலும் ஆயிரக்​கணக்​கானோர் தஞ்​சமடைந்​தனர். இதேபோல நரக​னஹள்ளி, கர்​னலா, துபெகெரே உள்​ளிட்ட கிராமங்​களி​லும் நிலநடுக்​கம் ஏற்​பட்​ட​தாக மக்​கள் தெரி​வித்​தனர். லேசான நிலநடுக்​கம் என்​ப​தால் எவ்​வித சேதமும் ஏற்​பட​வில்லை.

லேசான நிலநடுக்கம் - பெங்களூரு மக்கள் பீதி
குமரி, நெல்லைக்கு வானிலை மையம் ரெட் அலர்ட்: புயல் 26-ம் தேதி உருவாகிறது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in