

புதுடெல்லி: போலி மருந்து தயாரிப்பில் தொழிற்சாலை உரிமையாளர் பிரமோத் குமார் குப்தா(67) என்பவரை ஹஸ்ரத் நிஜாமுதீன் பகுதியில் டெல்லி போலீஸார் கைது செய்தனர்.
இவர்தான் போலி மருந்து தயாரிப்பில் மூளையாக செயல்பட்டுள்ளார். போலீஸார் நடத்திய ஆய்வில் மற்றொரு தொழிற்சாலையும் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு ‘பெட்னோவேட்’ என்ற மருந்து சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்டு வட இந்தியா முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளது. அங்கு 50,000-க்கும் மேற்பட்ட போலி பெட்னோவேட் மருந்துகள் இருந்தன.
அங்கு 700 ட்யூப் போலி ஃபேர் அன்ட் லவ்லி கிரீம், 800 ட்யூப் முடி அகற்றும் கிரீம் ஆகியவை இருந்தன. போலி மருந்து தயாரிப்பில் தொடர்புடைய அனைவரையும் பிடிக்க போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.