மேற்கு வங்கத்தைப் பிரிக்க சதி: மத்திய அரசு மீது மம்தா புகார்

மேற்கு வங்கத்தைப் பிரிக்க சதி: மத்திய அரசு மீது மம்தா புகார்
Updated on
1 min read

புதுடெல்லி: மேற்கு வங்​கத்​தின் பாங்​குரா மாவட்​டத்​தில் உள்ள சத்னா மற்​றும் ஒண்டா ஆகிய இடங்​களில் நடை​பெற்ற தேர்​தல் பிர​சா​ரக் கூட்​டங்​களில் மம்தா பங்​கேற்​றுப் பேசி​னார்.

அப்​போது அவர் கூறிய​தாவது: பாஜக அரசு புதி​தாக தொகுதி மறு​வரையறை மசோ​தாவைக் கொண்டு வந்​து, மேற்கு வங்​கத்தை மூன்று பகு​தி​களாகப் பிரிக்​கத் திட்​ட​மிட்​டுள்​ளது. மாநிலத்​தின் சில பகு​தி​களை பீகார் மற்​றும் ஒடி​சாவுடன் இணைக்க அவர்​கள் முயல்​கின்​றனர். இதன் மூலம் அந்​தப் பகு​தி​களில் வசிக்​கும் வங்க மொழி பேசும் மக்​கள் கடும் சித்​திர​வதைக்கு உள்​ளா​வார்​கள். பெங்​காலிகளின் ஒற்​றுமை​யைச் சிதைக்​கவே இந்​தச் சதி நடக்கிறது.

திரிண​மூல் காங்​கிரஸ் ஆட்​சியை வீழ்த்த பாஜக ரூ.1,000 கோடி பேரம் பேசி​யுள்​ளது. இதற்​கு, ஆம் ஜனதா உன்​னயன் கட்சி தலைவர் ஹுமாயூன் கபீர் தொடர்​பான வீடியோவே சாட்​சி​யாக உள்​ளது. சிறு​பான்​மை​யினரின் வாக்​கு​களைப் பிரித்து திரிண​மூல் காங்​கிரஸைத் தோற்​கடிக்க ரூ.1,000 கோடி ஒப்​பந்​தம் செய்யப்​பட்​டுள்​ளது. அதன் முன் ​பண​மாக ரூ.200 கோடி கைமாறியுள்ளது.

தேர்​தல் நேரத்​தில் பாஜக​வினர் வாக்​காளர்​களுக்​குப் பணம் கொடுத்து விலைக்கு வாங்க முயல்​வார்​கள். வாக்​குப் ​ப​திவு முடிந்ததும் அளித்த வாக்​குறு​தி​களை மறந்​து​விடு​வார்​கள். பொது​மக்​கள் விழிப்​புடன் இருக்க வேண்​டும். இவ்​வாறு மம்​தா பேசினார்.

மேற்கு வங்கத்தைப் பிரிக்க சதி: மத்திய அரசு மீது மம்தா புகார்
தூத்துக்குடி தொகுதியில் கெத்து காட்டப்போவது யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in