SIR: டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையருடன் மம்தா பேசியது என்ன?

SIR: டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையருடன் மம்தா பேசியது என்ன?
Updated on
1 min read

புதுடெல்லி: மேற்கு வங்​கத்​தில் ஏப்​ரல் மாதம் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்ள நிலை​யில், வாக்​காளர் பட்​டியல் தீவிர திருத்​தப்பணி (எஸ்​ஐஆர்) நடை​பெறுகிறது.

இப்​பணி பாரபட்​ச​மான முறை​யில், அரசி​யல் உள்நோக்கத்துடனும் நடை​பெறு​வ​தாக ஆளும் திரிண​மூல் காங்கிரஸ் கட்சி குற்​றம்சாட்டி உள்​ளது. இந்​நிலை​யில், மேற்கு வங்க முதல்​வர் மம்தா பானர்ஜி தலை​மையி​லான 15 பேர் கொண்ட குழு​வினர் நேற்று முன்​தினம் டெல்லி சென்​றனர். அவர்கள் தலைமை தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமாரை நேற்று சந்​தித்​துப் பேசினர்.

இக்​குழு​வில், திரிண​மூல் காங்​கிரஸ் எம்​.பி.க்​கள் அபிஷேக் பானர்ஜி, கல்​யாண் பானர்ஜி மற்​றும் எஸ்​ஐஆ​ரால் பாதிக்​கப்​பட்ட குடும்​பத்​தினர் இடம்​பெற்​றிருந்​தனர். அப்​போது, தேர்​தல் ஆணையர்​கள் எஸ்​.எஸ்​.​சாந்து மற்​றும் விவேக் ஜோஷி ஆகியோரும் உடன் இருந்​தனர். எஸ்​ஐஆர் பணி குறித்து மம்தா குழு​வினர் புகார் தெரி​வித்​தனர்.

அப்​போது, ஞானேஷ் குமார் பதில் அளிக்க முற்​பட்​ட​போது, திரிணமூல் காங்​கிரஸார் குறுக்​கிட்​டுப் பேசி உள்​ளனர். இதனிடையே, மம்தா தலை​மையி​லான குழுவினர் பாதி​யிலேயே வெளி​யேறிய​தாகக் கூறப்​படு​கிறது.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் மம்தா கூறும்​போது, “எஸ்​ஐஆர் விவ​காரத்​தில் உங்​களை நம்​பு​கிறேன் என தலை​மைத் தேர்​தல் ஆணை​யரிடம் நான் கூறினேன். ஆனால் அவர் அதைப் பொருட்படுத்​த​வில்​லை. நாங்​கள் அவமானப்​படுத்​தப்​பட்​டோம். அதனால்​தான் கூட்​டத்தை புறக்​கணித்து வெளி​யேறினோம்” என்றார்.

இது குறித்து ஆணைய வட்​டாரங்​கள் தரப்​பில் கூறுகை​யில், “தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் மற்​றும் இதர ஆணை​யர்​கள் மம்தா பானர்​ஜி​யின் கேள்வி​களுக்கு மிக​வும் கனிவான முறை​யிலேயே பதிலளித்​தனர். சட்​டத்​தின் ஆட்சி நிலை​ நாட்​டப்​படும் என்​றும், சட்​டத்தை மீறு​பவர்​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும் என்​றும் அவரிடம் விளக்​கம் அளிக்கப்பட்டது.

இருப்​பினும், தலை​மைத் தேர்​தல் ஆணை​யரின் விளக்​கத்தை ஏற்க மறுத்த மம்தா பானர்​ஜி, ஆணை​யத்​தின் மீது ஆதா​ரமற்ற குற்​றச்​சாட்​டு​களை முன்​வைத்​ததுடன் ஒரு கட்​டத்​தில் ஆவேசமடைந்த அவர் அங்​கிருந்த மேஜையைத் தட்டி கடும் வாக்கு ​வாதத்​தில் ஈடு​பட்​டதுடன், பாதி​யிலேயே கூட்டத்தில் இருந்து வெளி​யேறி​னார். ஒரு மாநிலத்​தின் முதல்​வ​ராக இருந்​து​கொண்டு அவர் நடந்​து​கொண்ட விதம் அதிர்ச்​சி​யளிக்​கிறது” என்று அந்த வட்​டாரங்​கள்​ தெரி​வித்​தன.

SIR: டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையருடன் மம்தா பேசியது என்ன?
பலுசிஸ்தான் பெண் தீவிரவாதிகளின் தற்கொலைப் படை தாக்குதலில் பாக். வீரர்கள் 200 பேர் பலி - நடந்தது என்ன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in