பவானிபூர் தேர்தல் தோல்வியை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மம்தா பானர்ஜி வழக்கு

கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த மம்தா பானர்ஜி

கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த மம்தா பானர்ஜி

Updated on
1 min read

கொல்கத்தா: பாவானிபூர் சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்த மம்தா பானர்ஜி, தேர்தல் முடிவை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர்ந்துள்ளார்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின்போது, அப்போதைய முதல்வரான மம்தா பானர்ஜி, பவானிபூர் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரான சுவேந்து அதிகாரி போட்டியிட்டார். இவர்களோடு காங்கிரஸ் வேட்பாளர், சிபிஎம் வேட்பாளர், சுயேட்சைகள் என மேலும் 10 பேர் இந்த தொகுதியில் போட்டியிட்டனர். இதில், பதிவான வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட்டன.

இதில் 15,105 வாக்குகள் வித்தியாசத்தில் மம்தா பானர்ஜி தோல்வி அடைந்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. மம்தா பானர்ஜி 58,812 வாக்குகள் பெற்ற நிலையில், சுவேந்து அதிகாரி 73,917 வாக்குகளைப் பெற்றிருந்தார். மற்ற கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் சொற்ப வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வி அடைந்தனர்.

வாக்கு எண்ணிக்கையின்போது முறைகேடு நடந்ததாகக் குற்றம்சாட்டிய மம்தா பானர்ஜி, வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து கோபமாக வெளியேறினார். மேலும், தேர்தல் தோல்வியை ஏற்கப்போவதில்லை என்றும் அவர் அறிவித்தார்.

அதேநேரத்தில், இந்தத் தேர்தலில் பாஜக 207 தொகுதிகளில் வெற்றி பெற்றது. திரிணமூல் காங்கிரஸ் 80 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. தேர்தல் வெற்றியை அடுத்து சுவேந்து அதிகாரி, மேற்கு வங்கத்தின் முதல்வராக பதவியேற்றார்.

இந்நிலையில், பவானிபூர் தேர்தல் முடிவை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மம்தா பானர்ஜி இன்று மனு தாக்கல் செய்தார். இதற்காக, கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு நேரில் சென்று அவர் தனது மனுவை தாக்கல் செய்துள்ளார்.

<div class="paragraphs"><p>கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த மம்தா பானர்ஜி</p></div>
“வினாத்தாள் கசிவால் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு துணை நிற்போம்” - பிரியங்கா காந்தி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in