“நாடாளுமன்ற பேரணியை வெற்றியடையச் செய்யுங்கள்” - மருத்துவமனையிலிருந்து சோனம் வாங்சுக் செய்தி

“நாடாளுமன்ற பேரணியை வெற்றியடையச் செய்யுங்கள்” - மருத்துவமனையிலிருந்து சோனம் வாங்சுக் செய்தி
Updated on
1 min read

புது டெல்லி: ஜந்தர் மந்தரிலிருந்து தான் அகற்றப்பட்டது சட்டவிரோதக் காவல் நடவடிக்கை என்று சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மருத்துவமனையிலிருந்து தெரிவித்தார். மேலும், நாளை (ஜூலை 20) கரப்பான்பூச்சி ஜனதா கட்சி திட்டமிட்டுள்ள நாடாளுமன்றப் பேரணியை வெற்றியடையச் செய்யுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

21-வது நாளாக உண்ணாவிரதம் இருந்த சோனம் வாங்சுக் நேற்று டெல்லி காவல்துறையினரால் கட்டாயமாக சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதனை தொடர்ந்து இன்று அவர் மருத்துவமனையிலிருந்து அனுப்பியுள்ள செய்தியில், “ஜூலை 20-ம் தேதி இரண்டாவது சுதந்திரப் போராட்டம். அச்சமற்ற இந்தியா, அநீதியற்ற இந்தியா. அநீதியிலிருந்து விடுதலை (தேர்வு வினாத்தாள் கசிவு போன்றவை), அச்சத்திலிருந்து விடுதலை (என்னைச் சட்டவிரோதமாகக் காவலில் வைத்திருப்பது) நோக்கியது இந்தப் போராட்டம்.

இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போராட்டமான, நாடாளுமன்றத்தை நோக்கிய இப்பேரணியை மாபெரும் வெற்றியடையச் செய்யுங்கள். இந்தச் செய்தி சஃப்தர்ஜங்கில் நான் சட்டவிரோதமாகக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் இடத்திலிருந்து கீதாஞ்சலி மூலம் அனுப்பப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னணி என்ன? - நீட் தேர்வு வினாத்​தாள் கசிவு உள்​ளிட்ட போட்​டித் தேர்வு முறை​கேடு விவ​காரத்​தில், மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் பதவி விலக வலி​யுறுத்தி சுற்​றுச் சூழல் ஆர்​வலர் சோனம் வாங்​சுக் டெல்லி ஜந்​தர் மந்​தரில் ஜூன் 28-ம் தேதி கால​வரையற்ற உண்​ணா​விரதப் போராட்​டம் தொடங்​கி​னார். அவருடன் அபிஜித் தீப்கே தலை​மையி​லான கரப்​பான்​பூச்சி ஜனதா கட்சி என்ற அமைப்​பினரும் போராட்​டத்​தில் பங்​கேற்​றனர்.

போராட்​டம் நேற்று முன்​தினம் 20 நாட்​களைக் கடந்த நிலை​யில் சோனம் வாங்​சுக் உடல்​நிலை மோசமடைந்​தது. அவர் சுமார் 9 கிலோ எடையை இழந்​தார். அவரது உயிரைக் காப்​பாற்ற மத்​திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்​டும் என டெல்லி உயர் நீதி​மன்றம் 2 நாட்​களுக்கு முன்பு உத்​தர​விட்​டது.

இந்​நிலை​யில், சோனம் வாங்​சுக் மற்​றும் அவருடன் போராட்​டத்​தில் ஈடு​பட்​டிருப்​பவர்​களுக்கு தின​மும் 2 முறை உடல்நல பரிசோதனை செய்யுமாறு 3 அரசு மருத்துவ​மனை​களுக்கு மத்​திய சுகா​தார அமைச்​சகம் உத்​தர​விட்​டது.

போராட்​டம் நேற்று 21-ம் நாளை எட்​டியது. இந்​நிலை​யில், மருத்துவ பணி​யாளர்​களும் சாதாரண உடை அணிந்த போலீஸாரும் நேற்று காலை 7.30 மணிக்கு ஜந்​தர் மந்​தருக்​குச் சென்றனர். அங்கு உண்​ணா​விரதம் மேற்​கொண்​டிருந்த வாங்சுக்கை தூக்கி வாக​னத்​தில் ஏற்​றினர்.

பின்​னர் அவரை விஎம்எம்சி சப்​தர் ஜங் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​தித்​தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது.

முன்​ன​தாக, உயர் நீதி​மன்ற உத்​தர​வின்​படி சோனம் வாங் சுக்கை மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் செல்ல முயன்ற போது, அங்​கிருந்த போ​ராட்​டக்​காரர்​கள் எதிர்ப்பு தெரி​வித்​தனர்​. எனினும்​ ​காவல்​ துறை​யினர்​ அவர்​களை ச​மா​தானப்​படுத்​தி அங்​கிருந்​து கலைந்​து செல்​லு​மாறு அறி​வுறுத்​தினர்​.

“நாடாளுமன்ற பேரணியை வெற்றியடையச் செய்யுங்கள்” - மருத்துவமனையிலிருந்து சோனம் வாங்சுக் செய்தி
10 தேசிய விருதுகளை வென்ற தமிழ் திரைத் துறையினருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in