ஏஐ உதவியால் குடும்பத்துடன் இணைந்த மகாராஷ்டிர பெண்

ஏஐ உதவியால் குடும்பத்துடன் இணைந்த மகாராஷ்டிர பெண்
Updated on: 
1 min read

மும்பை: மகாராஷ்டிராவின் பர்பானி பகுதியைச் சேர்ந்தவர் ஜுலேகா (45). மனநலம் பாதிக்கப்பட்ட அவர் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிநது் கடைசியாக சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டார்.

அவர் அளித்த தகவலின்பேரில், செயற்கை நுண்ணறிவு உதவியுடன் அவரது சொந்த ஊர் கண்டுபிடிக்கப்பட்டு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஜுலேகாவின் கணவர் முகீத் ஷேக் ஆசிரமத்துக்கு நேரில் சென்று தனது மனைவியை அழைத்துச் சென்றார்.

இதுகுறித்து ஆசிரம அறங்காவலர் கிஷான் சோரி கூறும்போது, “செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியால் சுமார் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு ஜுலேகா தனது குடும்பத்தினருடன் இணைந்துள்ளார்" என்று தெரிவித்தார்.

ஏஐ உதவியால் குடும்பத்துடன் இணைந்த மகாராஷ்டிர பெண்
மதுரை நகைக் கடை கொள்ளையில் இன்ஸ்டா பிரபலத்தை தீவிரமாக தேடும் போலீஸார்

X