ம.பி.யில் தனக்கு தினமும் உணவளித்தவரின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற விசுவாசமான நாய்

Updated on: 
1 min read

போபால்: மத்திய பிரதேசத்​தில் மோகன்​லால் ரைக்​வர் என்​பவர் தினமும் உணவளித்து வந்த தெரு நாய், அவரது இறுதி ஊர்​வலத்தில் பங்​கேற்று பின்​தொடர்ந்து சென்​றது நெகிழ்ச்​சியை ஏற்படுத்​தி​யுள்​ளது.

மத்​திய பிரதேச மாநிலம், சிஹோர் மாவட்​டத்​தில் வசித்து வந்த மோகன்​லால் ரைக்​வர் (75) என்ற ஓய்வு​பெற்ற வங்கி ஊழியர், தனது பகுதி​யில் சுற்​றித் திரிந்த காளு என்ற தெரு நாய்க்கு தினமும் உணவளித்து வந்​தார். இத​னால் இரு​வருக்​கும் இடையே நாளடை​வில் ஆழமான பாசம் ஏற்​பட்​டது.

மோகன்​லால் கடந்த வாரம் உயி​ரிழந்​தார். இதையடுத்து நடை​பெற்ற அவரது இறுதி ஊர்​வலத்​தில் காளு அமைதி​யாகப் பின்​தொடர்ந்து மயானம் வரை சென்​றது. இறுதிச் சடங்​கு​கள் முடியும் வரை தனது அன்​புக்​குரிய​வரின் அரு​கிலேயே பொறுமையாக இருந்​தது.

இறுதிச் சடங்​கு​களுக்​குப் பிறகு நடை​பெற்ற இரங்​கல் கூட்​டத்​தின்​போது, அங்கு வந்த காளு, கூட்​டத்​தினரை நோக்கி நடந்து சென்று அமைதி​யாக அமர்ந்​தது. அப்​போது மோகன்​லால் நினைவாக அனைவரும் 2 நிமிடங்​கள் மவுன அஞ்​சலி செலுத்​தினர்.

இதையடுத்து, தக​னம் முடிந்த பின்​னர் உறவினர்​கள் மற்​றும் நண்பர்​கள் மோகன்​லாலின் வீட்​டுக்​குச் சென்​றபோதும் காளு அவர்​களு​டன் சென்​றது. அங்கு சிறிது நேரம் இருந்​து​விட்டு, தனது அன்​புக்​குரிய​வருக்கு இறுதி மரியாதை செலுத்​திய திருப்​தி​யுடன் அமைதி​யாக அங்​கிருந்து சென்​றது. இச்​சம்​பவம் அங்​கிருந்​தவர்களை நெகிழ்ச்சி​அடைய செய்​ததோடு, இது​தொடர்​பான காணொளி சமூக வலை​தளங்​களில் வைரலாகி உள்​ளது.

ம.பி.யில் தனக்கு தினமும் உணவளித்தவரின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற விசுவாசமான நாய்
100 நாள் ஆகியும் முடித்து வைக்கப்படாத நாடாளுமன்ற கூட்டத்தொடர்: தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு ஆதரவு திரட்டும் மத்திய அரசு

X