வங்கக் கடலில் நவ.15-க்குள் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்

வங்கக் கடலில் நவ.15-க்குள் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்
Updated on: 
1 min read

புது டெல்லி: தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நவம்பர் 15-க்குள் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, வங்கக் கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிக்கோபார் தீவுகள் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியின் தாக்கத்தால், இன்று காலை 5.30 மணியளவில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

"தென்கிழக்கு வங்கக் கடலில் உள்ள இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, நவம்பர் 15-க்குள் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வானிலை அமைப்பு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, நவம்பர் 14-வாக்கில் 'தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக' மாறி, பின்னர் அதே பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கத்தால், நவம்பர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் அந்தமான் கடல் பகுதியிலும், நவம்பர் 13 முதல் 16 வரை தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியிலும், மணிக்கு சுமார் 50 கி.மீ. வேகத்திலும், அவ்வப்போது 60 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.

மேலும், நவம்பர் 15 முதல் 17 வரை தென்மேற்கு வங்கக் கடலிலும், நவம்பர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் மத்திய வங்கக் கடலிலும், மணிக்கு 55 கி.மீ. வேகத்திலும், அவ்வப்போது 65 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் நவ.15-க்குள் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்
"நவீன ஆராய்ச்சியின் பலன்களை இந்தியா உலகத்துடன் பகிர வேண்டும்" - பிரதமர் மோடி

X