

கொல்கத்தா: ‘பங்களா போக்கோ சாரிடபிள் ட்ரஸ்ட்’ என்ற தொண்டு நிறுவனம் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தது. அதில், வங்கிகள் ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையை கடைபிடிக்கவும், மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் பிராந்திய மொழியான வங்காள மொழியைப் பயன்படுத்தவும் உத்தரவிட் வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், நீதிமன்ற உத்தரவுப்படி ஆங்கிலம், இந்தி மற்றும் சம்பந்தப்பட்ட பிராந்திய மொழி பயன்பாடு குறித்து எஸ்பிஐ உள்ளிட்ட சில வங்கிகள் ஏற்கெனவே தங்களது அறிக்கைகளை தாக்கல் செய்துள்ளன. இந்நிலையில், இன்னும் அறிக்கைகளை தாக்கல் செய்யாத வங்கிகள் உடனடியாக அறிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டும் என தலைமை நீதிபதி சுஜோய் பால் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.