செங்கோட்டையில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்: உளவுத் துறை எச்சரிக்கை

நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு
டெல்லியின் சாந்தினி சவுக் பகுதியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, செங்கோட்டை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.படம்: பிடிஐ

டெல்லியின் சாந்தினி சவுக் பகுதியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, செங்கோட்டை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.படம்: பிடிஐ

Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லி செங்​கோட்​டை, முக்​கிய வழி​பாட்​டுத் தலங்​களில் தாக்​குதல் நடத்த லஷ்கர் தீவிர​வாத அமைப்பு திட்​ட​மிட்​டுள்​ள​தாக உளவுத் துறை எச்​சரிக்கை விடுத்​துள்​ளது.

டெல்லி செங்​கோட்​டை, சாந்​தினி சவுக்கில் ஒரு கோயில் உட்பட நாடு முழு​வதும் முக்​கிய வழி​பாட்​டுத் தலங்​களி​லும் தாக்​குதல் நடத்த தீவிர​வா​தி​கள் திட்​ட​மிட்​டுள்​ள​தாக உளவுத் துறை எச்​சரிக்கை விடுத்​துள்​ளது.

பாகிஸ்​தானைச் சேர்ந்த லஷ்கர் தீவிர​வாத அமைப்​பு, தாக்​குதல் நடத்​தத் திட்​ட​மிட்​டுள்​ள​தாக உளவுத்​துறை எச்​சரித்​துள்​ளது. இதையடுத்​து, டெல்லி செங்​கோட்​டை, பொது​மக்​கள் அதி​கம் கூடும் இடங்​கள், நாடு முழு​வதும் உள்ள முக்​கிய வழி​பாட்​டுத் தலங்​களில் பாது​காப்பு ஏற்​பாடு​கள் பலப்​படுத்​தப்​பட்​டுள்​ளன.

கடந்த பிப்​ர​வரி 6-ம் தேதி பாகிஸ்​தான் தலைநகர் இஸ்​லா​மா​பாத்​ மசூதி ஒன்​றில் நிகழ்த்​தப்​பட்ட தற்​கொலைப் படைத் தாக்​குதலில் 31 பேர் உயி​ரிழந்​தனர். இ​தக்கு ஐஎஸ் தீவிர​வாத அமைப்பு பொறுப்​பேற்​றது. எனினும், இந்​தத் தாக்​குதலுக்கு பழி​வாங்​கும் நோக்​கில் லஷ்கர்​-இ-தொய்பா அமைப்பு இந்​தி​யா​வில் தாக்​குதல் நடத்த சதித் திட்​டம் தீட்டி இருப்​ப​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

கடந்த 2025, நவம்​பர் 10-ம் தேதி டெல்லி செங்​கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்​டு​வெடிப்​புச் சம்​பவத்​தைத் தொடர்ந்து இந்த எச்​சரிக்கை விடுக்​கப்​பட்​டுள்​ளது. அந்​தத் தாக்​குதலில் 12 பேர் உயி​ரிழந்​தனர். மேலும் சுமார் 24 பேர் காயமடைந்​தனர்.

இது தொடர்​பான வழக்கை என்ஐஏ விசா​ரித்து வரு​கிறது. டிஎன்ஏ பரிசோதனை முடிவு​களின்​படி, ஃபரி​தா​பாத்​தில் உள்ள அல்​-ஃபலா பல்​கலைக்​கழக மருத்​து​வர் உமர் முகமது என்​பவர் அந்​தக் காரை ஓட்​டிச் சென்​றதும் அவர் உயி​ரிழந்​ததும் உறு​தி செய்​யப்​பட்​டது.

<div class="paragraphs"><p>டெல்லியின் சாந்தினி சவுக் பகுதியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, செங்கோட்டை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.படம்: பிடிஐ</p></div>
அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: வரி விவகாரத்தை ஆய்வு செய்கிறது இந்தியா!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in